Japan crime case Japan crime case
க்ரைம்

"40 நாட்கள் கொடூரமாக சீரழிக்கப்பட்ட மாணவி!" அந்தரங்க உறுப்பில் தீக்காயம்.. சிமெண்ட் பாரலில் கொலை செய்து மறைத்த சிறுவர்கள்

நான்கு பதின்மவயது சிறுவர்களும் ஃபருடாவின் கண் இமைகளில் சூடான மெழுகை ஊற்றி, மார்பகங்களில் ஊசிகளைவைத்து குத்தி கொடுமை செய்துள்ளனர்.

Vinvizhi Leninton

1989-ல் நான்கு பதின்வயது சிறுவர்களால் ஒரு உயர்நிலைப் பள்ளி மாணவி கொடூரமாக, இரக்கமின்றி கொலை செய்யப்பட்ட சம்பவம், ஒரு தேசம் முழுவதையும் மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகையும் உலுக்கியது. குற்றவாளிகள் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் காட்டிய உச்சகட்டக் கொடுமையும் வக்கிர குணமும், இச்சம்பவம் உலகின் மிகவும் இழிவான குற்றங்களில் ஒன்றாக தற்போது வரை பார்க்கப்படுகிறது.

ஜப்பானின் மிசாடோ நகரில் நவம்பர் மாதத்தில் 16 வயதான ஃபருடா ஜுன்கோ, தனது பகுதிநேர வேலையிலிருந்து மிதிவண்டியில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். இந்நிலையில், ​​ஹிரோஷி மியானோ, ஜோ ஒகுரா, ஷின்ஜி மினாடோ மற்றும் யசுஷி வதனாபே ஆகியோரால் கடத்தப்பட்டார். அவர்கள் ஃபருடாவை டோக்கியோவின் அயசே மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டில் 40 நாட்களுக்கும் மேலாகச் சிறைவைத்து, ஒவ்வொரு நாளும் கொடூரமான மற்றும் அருவருப்பான சித்திரவதைகளுக்கு உள்ளாகியுள்ளனர்.

ஃபருட்டா, அந்தக் கும்பலாலும் அவர்களுடைய நண்பர்களாலும் ஒரு நாளைக்கு பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, தாக்கப்பட்டார். அவர்களில் சிலர் யகூசா ​​ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களின் உறுப்பினர்களாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது. ஃபருடாவைக் கடத்தியவர்கள் அவரது பிறப்புறுப்பில் பட்டாசுகளை வெடிக்கச் செய்ததால், கடுமையான தீக்காயங்கள் மற்றும் இரத்தப்போக்கு ஏற்பட்டது. மேலும், ஃபருடா பட்டினி போடப்பட்டு, கரப்பான் பூச்சிகளை உண்ணவும், அவரது சொந்த சிறுநீரைக் குடிக்கவும் கட்டாயப்படுத்துள்ளார்.

சில சமயங்களில், ஃபருடாவைக் கடத்தியவர்கள் அவரை அவர்களது அறையின் கூரையிலிருந்து தொங்கவிட்டு, அடி வாங்கும் பையாகப் (punching bag) பயன்படுத்தியுள்ளனர். இந்த இரக்கமற்ற அடிகள் ஃபருடாவின் உள்ளுறுப்புகளைச் சேதப்படுத்தி, உள் இரத்தப்போக்கை ஏற்படுத்தி, அவரை வேதனையில் துடிக்க வைத்தன. அந்த நான்கு பதின்மவயது சிறுவர்களும் ஃபருடாவின் கண் இமைகளில் சூடான மெழுகை ஊற்றி, மார்பகங்களில் ஊசிகளைவைத்து குத்தி கொடுமை செய்துள்ளனர். அவர்கள் ஃபருடாவின் உடற்பகுதியில் இரும்புத் தடிகளைப் போட்டு, ஃபருடாவால் சிறுநீர் மற்றும் மலம் கழிப்பதில் கட்டுப்பாட்டை இழக்கச் செய்தனர்.

ஒரு மாதத்திற்கும் மேலாகப் புரிந்துகொள்ள முடியாத கொடூரத்தைத் தாங்கிக்கொண்டிருந்த ஃபருடா, இறுதியில் 1989, ஜனவரி 4 அன்று தனது காயங்களால் உயிரிழந்தார். ஃபருடாவைக் இறக்க காரணமானவர்கள், 50 கேலனுக்கும் அதிகமான சிமெண்ட் நிரப்பப்பட்ட ஒரு பேரலில் ஃபருடா உடலை மறைக்க முயன்றுள்ளனர். இருப்பினும், டிசம்பரில் தாங்கள் வழிமறித்த 19 வயதுப் பெண்ணைக் கடத்தித் தாக்கிய சம்பவம் தொடர்பாக, அந்தக் கும்பலைச் சேர்ந்த இருவரை ஜனவரி மாத இறுதியில் காவல்துறை கைது செய்தது. காவல்துறை விசாரணையின் போது, ​​அவர்கள் ஃபருதாவைக் கடத்தியதை ஒப்புக்கொண்டதோடு, மறுநாள் தாங்கள் கண்டெடுத்த ஃபருடாவின் உடலின் இருப்பிடத்தையும் தெரிவித்தனர்.

போலீசார் இறுதியில் ஏப்ரல் மாதம் அந்த கும்பலின் எஞ்சிய இரண்டு உறுப்பினர்களையும் கைது செய்தனர். குற்றவாளிகள் மீது கடத்தல், பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை உள்ளிட்ட பல்வேறு குற்றங்கள் சுமத்தப்பட்டன.இந்தக் கும்பலின் தலைவனான மியானோவுக்கு நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. ஒகுராவுக்கு எட்டு ஆண்டுகள் சிறார் சிறைத் தண்டனையும், மினாட்டோ மற்றும் வதனாபேவுக்கு முறையே ஐந்து முதல் ஏழு ஆண்டுகள் மற்றும் ஐந்து முதல் ஒன்பது ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.

இந்த மென்மையான தண்டனைகள் நாடுமுழுவதும் சீற்றத்தை ஏற்படுத்தியதோடு, குற்றவாளிகளான கும்பலுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் எனப் பலரும் கோரினர். மேலும், ஃபருதாவின் தாய், தன் மகளுக்கு நேர்ந்த கொடுமைகளின் கோரமான விவரங்களைக் கேட்ட பிறகு மனநல பாதிப்புக்கு உள்ளானதாகவும், சிகிச்சைக்காக மனநலப் பிரிவில் சிறிது காலம் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.