க்ரைம்

“தந்தையையும், மகனையும் கொன்ற தாளாளர்” - தூக்கிவிட்ட அண்ணனுக்கு துரோகம் செய்த தம்பி.. குற்றவாளி நடத்திய தனியார் பள்ளி!

தனக்கும் தனது அண்ணனுக்கும் சொந்தமான இடத்தில் தேன்மலர் என்ற தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியை நடத்த தொடங்கியுள்ளார்.

Mahalakshmi Somasundaram

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அடுத்த சிறுகிணறு பகுதியைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி லிங்கசாமி. இவருக்கு திருமணமாகி முருகானந்தம் என்ற மகன் இருந்தார், லிங்கசாமி ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் அதிலிருந்து வந்த பணத்தை முதலீடாக வைத்து தனது தம்பியான தண்டபாணியுடன் சேர்ந்து, ஒரு பைனான்ஸ் தொழில் செய்து வந்துள்ளார், தொழிலில் கிடைத்த வருமானத்தை வைத்து இருவரும் சேர்ந்து பல இடங்களில் நிலத்தை வாங்கியுள்ளனர். சொத்துக்களின் மீது ஆசை கொண்ட தண்டபாணி அனைத்து சொத்துக்களும் தனக்கு மட்டுமே என லிங்கசாமியிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.

லிங்கசாமி “உனக்கு சொந்தமான சொத்துக்களை மட்டும் நீ எடுத்துக்கொள்” என கூறியதால் ஆத்திரம் அடைந்த தண்டபாணி, ஆட்களுடன் சேர்ந்து தனது அண்ணன் லிங்கசாமியை கொலை செய்துள்ளார். இதையடுத்து வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் இருந்த தண்டபாணி, சிறையை விட்டு வெளியில் வந்ததும் சொத்துக்களை வைத்து கொண்டு கல்வி பணிகளை செய்ய தொடங்கியுள்ளார்.தனக்கும் தனது அண்ணனுக்கும் சொந்தமான இடத்தில் தேன்மலர் என்ற தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியை நடத்த தொடங்கியுள்ளார். தகவல் அறிந்த லிங்கசாமியின் மகன் முருகானந்தம் இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளார்.

முருகானந்தம் வழக்கறிஞர் தொடர்ந்து வழக்கை நடத்தி வந்துள்ளார், இந்நிலையில் தண்டபாணி முருகானந்தத்தின் அனுமதி இல்லாமல் தென்மலர் பள்ளியில் நான்காவது மாடியை கட்டியுள்ளார். இதனால் கோர்ட் உத்தரவின் பேரில் முருகானந்தம் தேன்மலர் பள்ளியின் நான்காவது மாடியை இடித்துள்ளார், இதில் தண்டபாணிக்கும், முருகானந்தத்திற்கும் இடையே இருந்த பகை மேலும் தீவிரம் அடைந்துள்ளது. இதனால் முருகானந்ததை கொல்ல திட்டம் தீட்டிய தண்டபாணி, தன்னிடம் வேலை பார்த்துக்கொண்டிருந்த கூலி தொழிலாளர்களுக்கு கஞ்சா, மது போன்ற போதை பொருட்களை கொடுத்து முருகானந்தத்தை கொலை செய்ய கூறியுள்ளார்.

அதன்படி முருகானந்தத்தை தனது வீட்டிற்கு அழைத்து சமாதானம் செய்வது போல நடித்து “சொத்துக்களை அளந்து தருகிறேன் பள்ளிக்கு வா” என கூறியுள்ளார், சித்தப்பா தானே என தண்டபாணி சொன்னதை நம்பி முருகானந்தமும் பள்ளி வளாகத்திற்கு சொத்துக்களை அளப்பதற்கு சென்றுள்ளார். அங்கு காத்திருந்த தண்டபாணியின் ஆட்கள் முருகானந்தத்தை அரிவாளால் சரமாரியக்க வெட்டி கொலை செய்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் முருகானந்தத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். 

மேலும் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் பள்ளி தாளாளரான தண்டபாணி, திருச்சியை சேர்ந்ந்த தாசனா மூர்த்தி, வாழப்பாடியைச் சேர்ந்த ராம், நாமக்கல் சேர்ந்த சுந்தரன், தொட்டியம் பகுதியை சேர்ந்த  நாகராஜன், நாட்டுதுரை போன்ற ஆறுபேர் முருகானந்தனை நாங்கள் தான் கொலை செய்தோம் என சரணடைந்துள்ளார்.இவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு வழக்கறிஞர் சாலையில் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.