க்ரைம்

“கட்டையால் அடித்து கொல்லப்பட்ட முதலாளி” - குடும்பத்துடன் தங்கியிருந்த கூலி தொழிலாளி.. வேலை செய்ய சொன்னதால் ஆத்திரம்!

தோட்டத்தில் வெள்ளகோவில் பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய கௌதம் என்பவரை வேலைக்கு சேர்த்துள்ளார்..

Mahalakshmi Somasundaram

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்துள்ள நத்தக்காடையூர் குட்டப்பாளையம் பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய சிவகுமார் இவர் காண்ட்ராக்ட் தொழில் செய்து வந்த நிலையில் அவருக்கு சொந்தமாக குட்டப்பாளையம் பகுதியில் விவசாய நிலம் உள்ளது. இருப்பினும் சிவகுமார் அவரது தாயான 75 வயதான கஸ்தூரி உடன் முத்தூரில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார். தனது காண்ட்ராக்ட் வேலையை முடித்துவிட்டு தினமும் குட்டப்பாளையம் வந்து விவசாயத்தையும் கவனித்து வந்தார்.

சிவகுமாருக்கு சில வருடங்களுக்கு முன்பு திருமணமான நிலையில் அவரது மனைவி கருத்து வேறுபாடு காரணமாக சிவக்குமாரை பிரிந்து தனியாக குடியிருந்து வருகிறார். தோட்டத்தை அங்கே தங்கி பார்த்துக்கொள்வதற்காக சிவகுமார் தோட்டத்தில் வெள்ளகோவில் பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய கௌதம் என்பவரை வேலைக்கு சேர்த்துள்ளார். எனவே கெளதம் அவரது குடும்பத்துடன் தோட்டத்தில் தங்கி கூலி வேலை பார்த்து வருகிறார்.

அடிக்கடி கெளதம் குடித்துவிட்டு தோட்டத்தை சரிவர பாதுகாப்பது இல்லை என சொல்லப்படுகிறது. இதனை அறிந்த சிவகுமார் பலமுறை தோட்டத்தை சரிவர பராமரிக்க சொல்லி கௌதமை கண்டித்து வந்துள்ளார். பின்னர் வழக்கம் போல நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு சிவக்குமார் தனது தாயை அழைத்துக்கொண்டு தோட்டதுக்கு காரில் சென்றுள்ளார். அப்போது கௌதம் குடிபோதையில் இருந்ததாக சொல்லப்படுகிறது.

இது குறித்து சிவக்குமார் கேட்கவே இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது ஒரு கட்டடத்திற்கு மேல் வாக்குவாதம் முற்றவே இதில் ஆத்திரமடைந்த கௌதம் அருகில் இருந்த மரக்கட்டையை எடுத்து சிவக்குமாரை கடுமையாக தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த சிவக்குமார் மயக்கமடைந்து சம்பவ இடத்தில் உயிரிழந்தார். மேலும் கஸ்தூரியை அடிக்க முற்பட்டபோது, அவர் தோட்டத்தில் இருந்த வீட்டிற்குள் சென்று கதவை தாலிட்டுக்கொண்டு தப்பியுள்ளார்.

சிவகுமார் உயிரிழந்ததை அறிந்த கெளதம் தோட்டத்தில் இருந்த தனது இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு தலைமறைவாகியுள்ளார். தகவலறிந்து காங்கேயம் ஏஎஸ்பி அர்பிதா ராஜ்புட் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் சிவகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இது பற்றி காங்கேயம் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான கௌதமை தேடி வருகின்றனர்.

கௌதம் நடவடிக்கை சரியில்லாததால், தனது தோட்டத்தில் இருந்து வெளியேறுமாறு சிவக்குமார் கூறியதாகவும் ஆனால் கௌதம் வெளியேற தாமதித்தால் இருவருக்கும் அடிக்கடி வாய் தகராறு ஏற்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தான் இந்த கொலை நடைபெற்றதா? என்ற கோணத்திலும் காவல்துறை விசாரணை செய்து வருகின்றனர். தோட்டத்து உரிமையாளரை கூலித்தொழிலாளி கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.