ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணி பாலியல் தொடர் பாலியல் குற்ற வழக்கில் திடீர் திருப்பமாக சிறப்பு விசாரணை குழுவில் இருந்து துணை காவல் ஆணையர் V.V. கீதாஞ்சலி விலகியிருப்பதாக செய்திகள் வந்துள்ளன.
தமிழக்கத்தையே உலுக்கிய ஜெம் வீரமணி வழக்கு தினமும் புதிய திருப்பங்களை சந்தித்து வருகிறது. இன்று காலையில் 11ம் வாகுப்பு மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக வீரமணி மீது புதிய வழக்கு பதியப்பட்டது.
முன்னதாக இந்த வழக்கில் புலன் விசாரணை மேற்கொள்ள 4 பெண் உயரதிகாரிகளைக் கொண்ட சிறப்பு விசாரணைக் குழு அமைத்து உத்தரவிட்டிருந்தார் டிஜிபி மகேஷ் குமார்.
இந்த குழுவில், மத்திய குற்றப்பிரிவு (CCB) கூடுதல் காவல் ஆணையர், P.C. தேன்மொழி IPS, சட்டம் & ஒழுங்கு இணை காவல் ஆணையர் திஷா மிட்டல் IPS, DGP/HoPF அலுவலகம் காவல் கண்காணிப்பாளர் J. முத்தரசி IPS, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் குழந்தைகள் நலப் பிரிவு துணை காவல் ஆணையர் V.V. கீதாஞ்சலி ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். P.C. தேன்மொழி IPS தலைமை தாங்குகிறார்.
முன்னதாக, இந்த வழக்கு குறித்த தகவல்கள், புகார்களைத் தெரிவிக்கப் பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த வழக்கில் இதுவரை வீரமணி, சாந்தி, மகேந்திர சிம்மன், கணேசன் உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். SRMU தலைவர் கண்ணையாவின் மகன் பிரகாஷுக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், இதில் அரசியல்வாதிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீதும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரஞ்சன் குமார் சிறப்பு புலனாய்வுக் குழுவால் விசாரிக்கப்பட்டார்.
அமல்ராஜ் ஐபிஎஸ், கண்ணன் ஐபிஎஸ் மற்றும் யாஸ்மின் உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகளை காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, விசாரணைக் குழுவினர் சாந்தி மற்றும் மகேந்திர சிம்மனை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர். இதில் பல்வேறு உண்மைகள் தெரியவந்தன. விசாரணை முடிந்த நிலையில், இருவரும் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளனர். ஜாமீன் வழங்கக் கூடாது என நீதிமன்றத்தில் காவல்துறையினர் கடுமையான எதிர்ப்பை முன்வைத்துள்ளனர்.
இந்த நிலையில், கீதாஞ்சலி தனிப்பட்ட காரணங்களுக்காகச் சிறப்பு விசாரணைக் குழுவில் இருந்து விலகியதாகக் கூறப்படுகிறது.
ஆனால் காவல்துறை வட்டாரங்கள் இந்த வழக்கின் முந்தைய விசாரணையில் கீதாஞ்சலி ஈடுபட்டிருந்ததுதான் விலகளுக்கு காரணம் எனத் தெரிவிக்கின்றன.
இதற்கு முன்பு மத்திய குற்றப்பிரிவில் துணை ஆணையராகப் பணியாற்றிய கீதாஞ்சலி, அப்போது, சென்னை காவல் ஆணையராக இருந்த அருணின் மேற்பார்வையில் அவர் இந்த வழக்கின் முந்தைய விசாரணையிலும் ஈடுபட்டிருந்தாகக் கூறப்படுகிறது.
அருண் இந்த வழக்கில் உரிய விசாரணை மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டை எதிர்கொண்டுவரும் சூழலில் சிறப்பு விசாரணைக் குழுவில் இருந்து கீதாஞ்சலி விலக விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்