
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை கோட்டை அடுத்துள்ள மாவனட்டி கிராமத்தை சேர்ந்தவர் சிவராஜ். இவருக்கும் மஞ்சுளா என்ற பெண்ணுக்கும் திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ள நிலையில் இவரது மூன்றாவது மகன் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுவன் (ஜூன் 01) இரண்டு நாட்களுக்கு முன்பு மாலை நேரத்தில் தனது நண்பர்களுடன் விளையாடி கொண்டிருந்துள்ளார்.
அப்போது அதே கிராமத்தை சேர்ந்த புட்டண்ணா என்பவரது மகனான 22 வயதான மாதேவன் தனது காதலியான ரதியுடன் ஊருக்கு ஒதுக்கு புறத்தில் தனிமையில் இருந்துள்ளார். எதிர்பாராதவிதமாக விளையாடி கொண்டே அப்பகுதிக்கு சென்ற சிறுவன் மாதேவன் அவரது காதலியுடன் தனிமையில் இருந்ததை பார்த்துள்ளார். உடனே அந்த இடத்தை விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.
ஆனால் சிறுவன் பார்த்ததை அறிந்த மாதேவன் மற்றும் ரதி எங்கு சிறுவன் பார்த்ததை ஊரிலோ அல்லது அவர்களது வீட்டிலோ சொல்லிவிடுவானோ என பயந்துள்ளனர். மேலும் சிறுவன் ரதியை அவதூறாக பேசியதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே சிறுவன் தனிமையில் இருந்ததை பார்த்துவிட்டான் என கோபத்தில் இருந்த மாதேவன் இதை கேட்டு மேலும் ஆத்திரமடைந்த உள்ளார். எனவே தனது நண்பனோடு சேர்ந்து சிறுவனை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளனர்.
சம்பவம் நடந்த மறுநாள் சிறுவன் உடல்நிலை சரியில்லை என பள்ளிக்கு போகாமல் விடுமுறை எடுத்துள்ளார். இதனை பயன்படுத்தி கொண்ட மாதேவன் தனது நண்பருடன் சேர்ந்து (ஜூன் 02) மாலை சிறுவனை காரில் கடத்தி சென்றுள்ளனர். ஆள் நடமாட்டம் இல்லாத காட்டு பகுதிக்கு சிறுவனை அழைத்து சென்ற மாதேவன் சிறுவனின் வாயில் வலுக்கட்டாயமாக பீர் ஊற்றி பள்ளத்தில் தூக்கி வீசி கொலை செய்துள்ளனர்.
சிறுவன் காணவில்லை என்பதை அறிந்த சிவராஜ் மற்றும் மஞ்சுளா போலீசில் புகாரளித்துள்ளனர். புகாரை ஏற்க மறுத்த போலீசார் “உன் மகன் என்ன கோடிஸ்வரன் பையன கடத்தி பணம் கேட்க, பக்கத்துல தான் எங்கயாவது இருப்பான் தேடுங்க” என அலட்சியமாக பதிலளித்துள்ளார். இதற்கிடையே சிறுவன் கட்டு பகுதியில் சடலமாக இருக்கும் செய்தி அறிந்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அப்பகுதிக்குச் சென்று சிறுவனின் உடலை மீட்டுள்ளனர். இந்நிலையிலும் மாவனட்டி காவல் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு செல்லாமல் இருந்துள்ளனர்.
பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கிருஷ்ணகிரி காவல் அதிகாரிகள் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் கொலை செய்த மாதேவன் அவரது நண்பர் மற்றும் உடந்தையாக இருந்த மாதேவனின் காதலி ரதி என மூவரை கைது செய்துள்ளனர். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சிவராஜ் மாவனட்டி காவல் அதிகாரிகள் மட்டும் புகாரளித்ததும் நடவடிக்கை எடுத்திருந்தால் தனது மகனை காப்பாற்றி இருக்காளாம் என கூறி கண்ணீர் வடித்துள்ளார். 8 வகுப்பு படிக்கும் சிறுவன் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.