
அடுத்தடுத்து தமிழகத்தில் தொடரும் தோட்டத்து வீட்டு கொலைகள். ஈரோடு சிவகிரியில் நடந்த தோட்டத்து வீட்டு கொலைகளின் பதற்றம் அடங்குவதற்குள் நேற்று முன்தினம் இரவு நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தோட்டத்து வீட்டில் தனியாக தங்கி வாழ்ந்து வந்த மூதாட்டி கொலை செய்யப்பட்டுள்ளது. மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் சித்தம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் 65 வயதான மூதாட்டி சாமியாத்தாள். இவருடைய கணவர் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்த நிலையில் தோட்டத்து வேலைகளை பார்த்து தனது மகன் மற்றும் மகளை படிக்க வைத்துள்ளார் சாமியாத்தாள்.
இருவருக்கும் திருமணமாகி மகள் அவர்களின் மாமியார் வீட்டிலும் மகன் கோவையில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை செய்வதால் அங்கேயே குடும்பத்துடன் தங்கியுள்ளார். எனவே மூதாட்டி வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். சனிக்கிழமை உறவினர்களின் திருமணத்திற்கு சென்று வீடு திரும்பிய சாமியாத்தாள் வீட்டின் வாசற் பகுதியில் படுத்து உறங்கியுள்ளார்.
இந்நிலையில் இரவு 12 மணியளவில் சாமியாத்தாள் வீட்டிற்குள் புகுந்த இரண்டு மர்ம நபர்கள் அவரிடம் நகை மற்றும் பணத்தை கேட்டு மிரட்டியுள்ளனர். இவர்களிடமிருந்து தப்பிக்க சாமியாத்தாள் சத்தம் போடவே ஆத்திரம் அடைந்த மர்ம நபர்கள் மூதாட்டியை கழுத்து மற்றும் வாய் பகுதியில் கத்தியால் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி சென்றுள்ளனர்.
சாமியாத்தாளின் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மூதாட்டி உயிரிழந்துள்ளார். இது குறித்து போலீசாருக்கு கிடைத்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
மூதாட்டியின் வீட்டிற்கு செல்லும் சாலையில் இருக்கும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ஈரோடு பகுதியை சேர்ந்த ஆனந்த் என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், ஆனந்தி மூதாட்டியின் தோட்டத்தில் வேலை செய்து தேங்காய் போன்ற பொருட்களை திருடியதால் மூதாட்டி ஆனந்தை வேலையை விட்டு தூக்கி அசிங்கப்படுத்தி உள்ளார்.
மேலும் சம்பள பாக்கியை கொடுக்காமல் தேவையற்ற வார்த்தைகளை பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆனந்த் மூதாட்டியை கொலை செய்ய எண்ணி, தனது நண்பருடன் இரவு மூதாட்டியின் வீட்டிற்கு வந்த கொலை செய்து தப்பி சென்றுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.