"சூப்பில் மண்டை ஓடு.. ஃபிரிட்ஜில் கால்கள்" - சொத்து விவகாரத்தில் முன்னாள் மனைவி வெட்டிக் கொலை! குடும்பத்தோடு சிக்கியது எப்படி?

அபே அந்தச் சொத்தை விற்க முடிவு செய்தபோது, ​​பிரச்னை தொடங்கியததாக அரசு தரப்பு வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.
Abby Choi Murder
Abby Choi Murder
Published on: 
Updated on: 
2 min read

குடியிருப்பை விற்பனை செய்வது தொடர்பாக ஏற்பட்ட தகராறின் காரணமாக, ஒரு மாடல் தனது முன்னாள் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரால் கொலை செய்யப்பட்டு, உடல் துண்டுகளாக்கப்பட்டதாகவும், பின்னர் அவரது தலை சூப்பாக சமைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

28 வயதான அபே சோய், 2023 பிப்ரவரியில் ஹாங்காங்கில் உயிரிழந்துள்ளார். பின்னர் அவரது மண்டை ஓடானது கேரட் மற்றும் காய்கறி கலந்த சூப்பில் கண்டெடுக்கப்பட்டதாகவும், 'கால்கள் குளிர்சாதனப் பெட்டியிலிருந்தும் மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அபேயின் முன்னாள் கணவர் அலெக்ஸ் குவாங், அவரது தந்தை குவாங் காவ் மற்றும் அவரது சகோதரர் ஆண்டனி குவாங் ஆகியோர் இந்த கொலைக் குற்றச்சாட்டின் பேரில் தற்போது அவர்களிடம் விசாரணையில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. ஆனால், அவர்கள் மூவருமே அபேயை கொலை செய்ததாக கூறும் குற்றச்சாட்டினை மறுக்கின்றனர்.

அபே தனது முன்னாள் மாமனார் மாமியாருக்காக வழங்கிய ஒரு குடியிருப்பை மையமாகக் கொண்டே இந்தச் சர்ச்சை தொடங்கியதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் கூறுகின்றனர். அவர் அந்தச் சொத்தை அலெக்ஸ் குவாங்கின் பெற்றோருக்காக வாங்கி, அபே தன் கணவரை விட்டு பிரிந்த பிறகும் கூட அவர்களை அங்கு தங்க அனுமதித்துள்ளார்.

இரண்டாவது வீட்டுக்கான முத்திரைத் தீர்வையைத் தவிர்ப்பதற்காக, அந்த வீடு குவாங் காவின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது . 2022-ல் அபே அந்தச் சொத்தை விற்க முடிவு செய்தபோது, ​​பிரச்சனை தொடங்கியதாக அரசு தரப்பு வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.

விற்பனைக்குத் தேவையான ஆவணங்களில் கையொப்பமிட குவாங் காவ் ஆரம்பத்தில் மறுத்துள்ளார். அதனால், அபே சட்ட நடவடிக்கை எடுப்பதாக அவரை மிரட்டியுள்ளார். இதனை அடுத்து அவர் ஒப்புக்கொண்டதாகவும் அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.

மேலும், அபேயை கொலை செய்வதன் மூலம் விற்பனையை தவிர்க்கலாம் என்று குவாங் காவ் ஒரு திட்டத்தைத் தீட்டியதாகவும், அலெக்ஸ் குவாங் மற்றும் ஆண்டனி குவாங் ஆகியோர் அந்தச் சதித்திட்டத்தில் இணைந்ததாகவும் அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

அபே தனது 18 வயதில் அலெக்ஸ் குவாங்கைத் திருமணம் செய்துள்ளார். மேலும், அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தன. விவாகரத்திற்கு பின்னர் அபே, உணவக அதிபரான கிறிஸ் டாம் ஃபோங்-சுன்னை மறுமணம் செய்துகொண்டு, அவருடன் மேலும் இரண்டு குழந்தைகளைப் பெற்றுள்ளார். கிறிஸ் “மிகவும் செல்வந்தர்” என்று நீதிமன்றம் கேட்டறிந்த நிலையில், அபேயின் புதிய குடும்பம் மற்றும் அவரது புதிய கணவரின் செல்வத்தின் மீதான பொறாமையே இந்த வழக்கின் பின்னணியில் ஒரு பகுதி என அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.

கூட்டு முயற்சி என்பதன் கீழ், அலெக்ஸ் குவாங், ஆண்டனி குவாங் மற்றும் குவாங் காவ் ஆகிய மூவர் மீதும் கொலைக் குற்றத்திற்காக தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. அலெக்ஸும் ஆண்டனியும், அவரது உடலைச் சட்டப்பூர்வமாக அடக்கம் செய்வதைத் தடுத்ததை ஒப்புக்கொண்டுள்ளனர். ஆனால் குவாங் காவ் அந்தக் குற்றத்தை மறுத்து வருவதாக கூறப்படுகிறது. மூவரும் கொலைக் குற்றத்தை தொடர்ந்து மறுத்து வருகின்றனர். மேலும் அவர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

தற்போது இந்த விசாரணையானது, சுமார் 45 நாட்கள் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குற்றத்திற்கு பிறகு அதிவேகப் படகு மூலம் ஹாங்காங்கிலிருந்து வெளியேற முயன்றதாகக் கூறப்பட்டதை அடுத்து அலெக்ஸ் குவாங் கைது செய்யப்பட்டுள்ளார்.

காவல்துறையினரின் விசாரணையின் போது, ​​இரத்தக்கறை படிந்த ஏழு இருக்கைகள் கொண்ட வாகனம் ஒன்றை காவல்துறை பறிமுதல் செய்துள்ளனர். ஆண்டனி குவாங்கின் காரிலிருந்து மீட்கப்பட்ட இரத்தம், அபேயுடையதுடன் பொருந்தியதாகவும் கூறப்படுகிறது. மேலும், தை போவில் உள்ள ஒரு இடத்திலிருந்து மீட்கப்பட்ட மண்டை ஓடு மற்றும் கால்கள் உள்ளிட்ட உடல் எச்சங்களும் அவருடையதுதான் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com