“வீடு முழுவதும் பொருத்தப்பட்ட கேமராக்கள்” - சந்தேகத்தின் உச்சத்திற்கு சென்ற கணவன்.. நள்ளிரவில் வெட்டி கொல்லப்பட்ட மனைவி!
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள தளவாய்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். இவர் மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையில் வேலை பார்த்து வருகிறார், இவருக்கும் அதே தளவாய்புரம் பகுதியைச் சேர்ந்த உமா மகேஸ்வரி என்பவருக்கும் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று தற்போது ஒரு மகன் ஒரு மகள் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் தமிழ்ச்செல்வன் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார் மேலும் தான் வீட்டில் இல்லாத போது மனைவி என்ன செய்கிறார், வீட்டிற்கு யாரெல்லாம் வந்து செல்கின்றனர் என்பதை கண்காணிக்க வீட்டிற்கு உள்ளே வெளியே, என பல்வேறு பகுதிகளில் சிசிடிவி கேமராக்களை அமைத்து உமாவை கண்காணித்து வந்துள்ளார்.
கடந்த சில தினங்களாகவே தமிழ்ச்செல்வன் இரவில் கூட வீட்டிற்கு வராமல் இருந்துள்ளார் இதனால் மனைவியை உமா கணவனை தேடி பார்த்துள்ளார், கணவன் எங்கு இருக்கிறார் என உமாவிற்கு தெரியாமல் இருந்துள்ளது. இந்த சூழலில் நேற்று இரவு திடீரென வீட்டிற்கு வந்த தமிழ்ச்செல்வன்,வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த இருந்த மனைவி உமாமகேஸ்வரியின் தலையை துண்டித்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடி உள்ளார்.
இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த ஏரல் காவல் நிலைய போலீசார் உமா மகேஸ்வரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர், மேலும் தப்பி ஓடிய தமிழ்செல்வன் மீது வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கணவன் வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.