தனது 3 வயது மகளைக் கொடூரமாகக் கொலை செய்த வழக்கில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட மேரிலாந்தைச் சேர்ந்த தாய் ஒருவர், அந்தப் பயங்கரமான குற்றத்தை ஒப்புக்கொண்டதால் பரபரப்பு.
டேரியன் ராண்டில், அவரது குழந்தை 3 வயது நோலா டிங்கின்ஸை பெல்ட்டால் அடித்துக் கொன்று, பின்னர் அந்தச் சிறுமியின் உடலை ஒரு சூட்கேஸில் திணித்துவிட்டு, சைனீஸ் உணவு வாங்கச் சென்றதாகக் கூறப்படுகிறது. ஜூன் 10, 2025 அன்று, 32 வயதான டேரியன் என்ற தாய், துப்பாக்கி முனையில் தன் மகள் கடத்தப்பட்டதாகக் கூறி, தன் குழந்தையை காணவில்லை எனப் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். நோலாவுக்காக ஆம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் அது உண்மையில்லை என்பது தெரியவந்துள்ளது.
ஜூன் 11, 2025 அன்று, நார்த் ஈஸ்ட் நகரில் ஒரு சூட்கேஸினுள் அவரது குழந்தை நோலாவின் உடல் கண்டெடுக்கப்பட்டது. புதன்கிழமை நீதிமன்றத்தில் காட்டப்பட்ட காணொளியில், நோலா கழிப்பறையில் கால்களில் காயங்களுடன் சாய்ந்த நிலையில் இருந்ததைக் காட்டிய, புலனாய்வாளர்கள் அவரது தொலைபேசியில் கண்டெடுத்ததாகக் கூறப்படும் புகைப்படம் குறித்து துப்பறிவாளர் ராண்டிலிடம் கேட்டதாக சிபிஎஸ் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ஆரம்பத்தில், அந்தக் காயங்கள் வெந்நீர்க் குளியலால் ஏற்பட்டதாக ராண்டில் கூறினார், ஆனால் இறுதியில் அந்தத் தாய், நோலாவை பெல்ட்டால் அடித்ததை ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், அவரது குழந்தை சொல் கேட்காவிட்டாலோ அல்லது பொய் சொன்னாலோ, அது தான் வழக்கமாகக் கொடுக்கும் தண்டனை என்றும் ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
ராண்டில், தனது குழந்தையை அடிப்பதற்கு பெல்ட், தன் கைகள் அல்லது ஒரு சந்தர்ப்பத்தில் செருப்பைப் பயன்படுத்தி மூர்க்கமாக அடிப்பதுள்ளார். இதையடுத்து ஜூன் 9, 2025 அன்று இரவு, தான் தண்டனையை குழந்தைக்கு "மிகவும் கடுமையாக" கொடுத்ததாகவும், "தன் கட்டுப்பாட்டை இழந்து" சிறுமி நோலாவை அவர் தனது சுயநினைவை இழக்கும் வரை 15 முதல் 20 முறை பெல்ட்டால் அடித்ததாகவும் ராண்டில் ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
அதன்பிறகு ராண்டில் தனது காதலரான செட்ரிக் பிரிட்டனை அழைத்ததாகவும், அவர் நோலாவுக்கு முதலுதவி செய்ய முயன்றதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், அந்த பச்சிளங்குழந்தை அதற்குள் இறந்துள்ளது.
ராண்டில், தானும் 44 வயதான பிரிட்டனும் நோலாவின் உடலை டேப்பில் சுற்றி, பின்னர் படிக்கட்டில் இருந்த ஒரு சூட்கேஸில் திணித்ததாக விசாரணையின் போது கூறியுள்ளார். அதன்பிறகு அந்தத் தம்பதியினர் கொஞ்சமும் குற்றவுணர்வு இன்றி சீன உணவு வாங்க வெளியே சென்றுள்ளனர். முதலில் நோலாவின் உடல் எங்கே என்று ராண்டிலிடம் பலமுறை கேட்கப்பட்டது, ஆனால் அவர் பதிலளிக்க மறுத்துள்ளார்.
ராண்டிலின் வீட்டின் கேரேஜில் இருந்த குப்பைத் தொட்டிக்குள், இரத்தம் படிந்திருப்பது போன்ற தோற்றத்துடன் இருந்த குழந்தையின் ஆடைகளைக் கண்டதாக மேரிலாந்து மாநில காவல்துறையைச் சேர்ந்த ஒரு காவலர் சாதிச்சியளித்துள்ளார். அதிகாரிகள் தங்கள் விசாரணையைத் தொடர்ந்தபோது, நோலாவின் உடல் இருந்த சூட்கேஸை அருகிலுள்ள ஒரு வீட்டிற்கு எடுத்துச் சென்றதாக பிரிட்டன் துப்பறிவாளர்களிடம் கூறியுள்ளார். அதன் பிறகு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். அவர்கள் சூட்கேஸைத் திறந்து பார்த்தபோது, கருவில் குழந்தை இருப்பது போன்ற நிலையில், டேப்பில் இறுக்கமாகச் சுற்றப்பட்ட, 'மெலிந்துபோன' ஒரு சிறிய சடலத்தைக் கண்டுள்ளனர்.
குழந்தை நோலாவின் மரணம் தொடர்பாக, முதல் மற்றும் இரண்டாம் நிலை கொலை, மரணத்தை விளைவிக்கும் குழந்தை துஷ்பிரயோகம் மற்றும் கூடுதலாக எட்டு கடுங்குற்றச்சாட்டுகள் உட்பட 11 குற்றச்சாட்டுகளை இருவரும் எதிர்கொண்டுவருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்