"மகளை தந்தையுடன் உடலுறவு கொள்ள கட்டாயப்படுத்திய தாய்” - 11 வயது சிறுமிக்கு நடந்த பிரசவம்... நீதிமன்றம் கொடுத்த அதிரடி தீர்ப்பு!

நீண்டகாலமாக அந்தச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாகவும்
sexual assault
Published on
Updated on
1 min read

அமெரிக்காவின் ஓக்லஹோமா மாநிலத்தில், தனது 11 வயது மகளை கணவரின் பாலியல் வன்கொடுமையிலிருந்து பாதுகாக்கத் தவறியதாக குற்றம் சாட்டப்பட்ட தாய் ஒருவர், நீதிமன்றத்தில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும், சிறுமிக்கு பிறந்த குழந்தையின் தந்தை அவரது வளர்ப்புத் தந்தை என்பதும் டிஎன்ஏ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீதிமன்ற ஆவணங்களின்படி, மஸ்கோகி கவுண்டி நீதிமன்றத்தில் நடைபெற்ற ஜூரி விசாரணையின் முடிவில், செரி வாக்கர் என்பவர், குழந்தை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டு மற்றும் ஆறு குழந்தை புறக்கணிப்பு குற்றச்சாட்டுகளில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டது. ஒவ்வொரு குற்றத்திற்கும் ஆயுள் தண்டனை விதிக்க வேண்டும் என்று ஜூரி பரிந்துரைத்துள்ள நிலையில், அவருக்கான இறுதி தண்டனை அறிவிக்கப்பட உள்ளது.

இந்த வழக்கு, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளிச்சத்துக்கு வந்தது. ஓக்லஹோமாவின் மஸ்கோகியில் உள்ள வீட்டில், 11 வயது சிறுமி ஒருவர் எந்தவித மருத்துவ உதவியும், கர்ப்பகால பராமரிப்பும் இன்றி வீட்டிலேயே குழந்தை பெற்றெடுத்தது அதிகாரிகளுக்கு தெரியவந்ததைத் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது.. விசாரணையில், சிறுமியின் வளர்ப்புத் தந்தையான டஸ்டின் வாக்கர், நீண்டகாலமாக அந்தச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாகவும், இதை அவரது மனைவி செரி வாக்கர் அறிந்திருந்தும், மகளை பாதுகாக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அரசுத் தரப்பு குற்றம் சாட்டியது.

பின்னர் நடத்தப்பட்ட டிஎன்ஏ பரிசோதனையில், சிறுமிக்கு பிறந்த குழந்தையின் தந்தை அந்த சிறுமியின் வளர்ப்பு தந்தையான டஸ்டின் வாக்கர் தான் என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, டஸ்டின் வாக்கர், 12 வயதுக்குட்பட்ட குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டு மற்றும் ஆறு குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார். அதன்பேரில், அவருக்கு பாலியல் வன்கொடுமை குற்றத்திற்கான ஆயுள் தண்டனையும், குழந்தை புறக்கணிப்பு குற்றங்களுக்காக கூடுதல் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் அரசு தரப்பு சார்பில் ஆஜரான உதவி மாவட்ட வழக்கறிஞர், "இந்தச் சிறுமி வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத மன உளைச்சலை அனுபவித்துள்ளார். பாலியல் வன்கொடுமையால் கர்ப்பமடைந்ததோடு மட்டுமல்லாமல், மருத்துவ உதவியின்றி வீட்டிலேயே குழந்தை பெற்றெடுக்க வேண்டிய கொடூரமான சூழ்நிலையையும் சந்தித்துள்ளார்" என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார். இந்த வழக்கில், பாதிக்கப்பட்ட சிறுமியின் பாட்டி மீதும் குழந்தையைப் புறக்கணித்ததாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. ஆனால், அவர் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள நிலையில், அவரது வழக்கு தொடர்பான விசாரணை தனியாக நடைபெற உள்ளது. இந்தச் சம்பவம் அமெரிக்காவில் குழந்தைகள் பாதுகாப்பு, குடும்பப் பொறுப்பு மற்றும் பாலியல் குற்றங்கள் தொடர்பாக மீண்டும் கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com