
திருப்பூர் மாவட்டம், உடுமலை அடுத்த குடிமங்கலம் அருகே உள்ள சிக்கனூத்து பகுதியில் மடத்துக்குளம் அதிமுக எம்எல்ஏ மகேந்திரனுக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இங்கு மூர்த்தி என்பவர் அவரது மகன்கள் தங்கபாண்டியன் மற்றும் மணிகண்டனுடன் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார்.தந்தை மகன்கள் என மூவருக்கும் குடிப்பழக்கம் இருக்கும் நிலையில் நேற்று இரவு மூர்த்தி மற்றும் தங்கபாண்டி இருவரும் குடித்துவிட்டு குடிபோதையில் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது இதில் தங்கபாண்டி தனது தந்தை மூர்த்தியை கடுமையாக தாக்கியுள்ளார். அப்போது மூர்த்தியின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்துக்கு தோட்டக்காரர்கள் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து குடிமங்கலம் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் அந்தப் பகுதி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அவருக்கு முதல் தகவல் கொடுக்கப்பட்டது இதனைத் தொடர்ந்து அங்கு சென்ற உதவி ஆய்வாளர் சண்முகவேல் தந்தை மகன் சண்டையை பிரித்து இருவரையும் சமாதானம் செய்து வைத்துள்ளார். மூர்த்தியை ஆம்புலன்ஸில் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்துள்ளார். இதற்கிடையே போலீசாரை பார்த்து தோட்டத்தில் மூர்த்தியின் இளைய மகன் மணிகண்டன் பதுங்கி இருந்துள்ளார்.
சப் இன்ஸ்பெக்டர் சண்முகவேல் மூர்த்தியை சிகிச்சைக்காக அனுப்ப ஏற்பாடு செய்து தந்தை மூர்த்தியையும், மகன் தங்கபாண்டியையும் புகைப்படங்கள் எடுத்து வண்டியில் ஏற்ற தயாரான நிலையில், தோட்டத்தில் பதுங்கி இருந்த மூர்த்தியின் இளைய மகன் மணிகண்டன் திடீரென்று அரிவாளை எடுத்து போலீசாரை துரத்தியுள்ளார். உடனே அங்கிருந்த மூர்த்தியும், தங்கபாண்டியும் சேர்ந்து அரிவாளை எடுத்து சப் இன்ஸ்பெக்டர் சண்முகவேல் மற்றும் உடன் சென்ற போலீஸ்காரர்களையும் தாக்கியுள்ளனர். இதில் சண்முகவேலுவை சரமாரியாக தலை, கழுத்து போன்ற பகுதிகளில் வெட்டியுள்ளனர், இதில் காயமடைந்த சண்முகவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மேலும் மூர்த்தியும் அவரது மகன்களும் சண்முகவேல் உடன் இருந்த இருந்த ஓட்டுனரையும் துரத்திச் சென்றுள்ளனர். தப்பிச் சென்று காவல் நிலையத்தில் இருந்த மற்ற போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதற்குள் மூர்த்தி மற்றும் அவரது மகன்களான தங்கபாண்டி, மணிகண்டன் ஆகியோர் தப்பிச் சென்று விட்ட நிலையில் குடிமங்கலம் போலீசார் தப்பிச் சென்ற தங்கபாண்டி, தேடி வருகின்றனர். சம்பவ இடத்துக்கு மேற்கு மண்டல டி.ஐ.ஜி, போலீஸ் எஸ்.பி உள்ளிட்டோர் வந்து தடயங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தினை விசாரிக்க ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்த முதலமைச்சர் சண்முகவேல் கொலை செய்யப்பட்டதை கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்ததாகக் தெரிவித்துள்ளார். சண்முகவேலை கொலை செய்த குற்றவாளிகளை விரைந்து கைது செய்யுமாறு காவல்துறைக்கு அணையிட்டுள்ளார், மேலும் சண்முகவேலின் குடும்பத்திற்கு 38 லட்சம் ரூபாய் நிவாரண நிதி அறிவித்துள்ளார். ஒரு காவலர் தோட்டத்தில் இரவு வெட்டி குற்றவாளிகளால் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.