“விஷ ஊசி போட்டு கொலை பண்ணிடுவேன்” - மருமகளை மிரட்டிய மாமனார்.. வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்த குடும்பம்!

பெண்ணின் நிலை அறிந்து பெண் இருந்த ஆம்புலன்சுக்கு வந்த வேலூர் வருவாய் கோட்டாட்சியர் செந்தில் வரதட்சணை கொடுமையால் பெண் கவலைக்கிடமான
“விஷ ஊசி போட்டு கொலை பண்ணிடுவேன்” - மருமகளை மிரட்டிய மாமனார்.. வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்த குடும்பம்!
Published on
Updated on
2 min read

வேலூர் மாவட்டம்,சதுப்பேரி முல்லை நகரை சேர்ந்த காவல்துறை உதவி ஆய்வாளர் பாபா என்பவரின் மகன் காஜாரபீக்கிற்கும். ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி அப்துல்கலாம் மகளான 21 வயதுடைய நர்கீஸ் என்பவருக்கும் பெற்றோர்களால் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் திருமணமான நாள் முதல் நர்கீசை அவரது மாமனார் பாபா மற்றும் மாமியாரும் பாபாவின் மூன்றாவது மனைவியுமான ஷகிலா வரதட்சணை கேட்டு வற்புறுத்தி வந்துள்ளனர்.

நர்கீஸ் குடும்பத்தினரிடமிருந்து வரதட்சணையாக 30 சவரன் தங்க நகைகள், திருமண செலவு 10 லட்சம், மேலும் இருசக்கர வாகனம் வாங்க ரூ.1. 50 லட்சம் பெற்றுள்ளனர். இருப்பினும் தொடர்ந்து நர்கீசிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் நர்கீசை அவரின் கணவர் காஜாரபீக் ஏமாற்றி தனிக்குடித்தனம் அழைத்து சென்று சைதாப்பேட்டை பகுதியில் இருவரும் வசித்து வந்துள்ளனர். அப்போது (ஜூன் 03) அன்று காஜாரபீக் தனது தந்தை உதவி ஆய்வாளரான பாபா தூண்டுதலின் பேரில் மனைவி நர்கீசை நைசாக பேசி மொட்டை மாடிக்கு அழைத்து சென்றுள்ளார்.

பின்னர் தனது மனைவியை கொல்லும் நோக்கில் மாடியிலிருந்து நர்கீசை கீழே தள்ளியுள்ளார். இதனால் நர்கீசின் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டு கால் உடைந்து கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து நர்கீசின் குடும்பத்தினர் காவல்துறையில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையையும் எடுக்காததால் இன்று ஆம்புலன்ஸ் மூலம் தனது பெற்றோர்களுடன் சத்துவாச்சாரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரில் வந்த நர்கீஸ் தனக்கு நீதி கிடைக்க வேண்டும் வரதட்சணை கொடுமை செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்துள்ளார். பெண்ணின் நிலை அறிந்து பெண் இருந்த ஆம்புலன்சுக்கு வந்த வேலூர் வருவாய் கோட்டாட்சியர் செந்தில் வரதட்சணை கொடுமையால் பெண் கவலைக்கிடமான நிலையில் உள்ளது குறித்து விசாரணை செய்தார்.

Admin

இதுகுறித்து பாதிக்கப்பட்ட நர்கீஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில் “தன்னுடைய இந்த நிலைக்கு காரணம் கணவர் மற்றும் மாமனார் மாமியார் தான் வரதட்சணை கேட்டு தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்தனர். இந்த நிலையில் கடந்த (3-6-2025) அன்று மாமனார் பாபா மற்றும் மாமியார் ஷகிலா கூறியதை கேட்டு எனது கணவர் காஜாரபீக் என்னை மொட்டை மாடியிலிருந்து கீழே தள்ளினார்.

நான் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். அப்போது என் மாமனார் காவல் உதவி ஆய்வாளர் பாபா என்னை கொன்றுவிடுவேன் “மருத்துவமனையிலேயே விஷ ஊசி போட்டு உன்னை கொன்றுவிடுவேன்” என மிரட்டினார் எனது பெற்றோர் ஏழைகள் என திருமணத்திற்கு பல லட்சம் கடன் வாங்கி வரதட்சணையாக பல லட்சம் நகை பணம் கொடுத்து திருமணம் செய்தனர். ஆனால் நான் தற்போது படுகாயங்களுடன் கவலைக்கிடமான நிலையில் உள்ளேன் எனவே இது போன்று வரதட்சணை கொடுமைகள் இனி நடக்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறினார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com