கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டம் சீனிவாசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் 35 வயதான கதிரம்மா. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வெங்கடரமணா என்பவருக்கும் கடந்த 20 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தற்போது இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் ரமணாவுக்கும் கதிரம்மாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. எனவே கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளாமல் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கதிரம்மாவுக்கு அவர்களது பக்கத்துக்கு வீட்டில் வசித்து வரும் வேணு என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது நாளடைவில் திருமணத்திற்கு மீறிய உறவாக மாற்றியுள்ளது. பைனான்சில் வேலை பார்க்கும் வேணு கதிரம்மாவுடன் அடிக்கடி வெளியில் சுற்றி திரிவது தனிமையில் இருப்பது என நெருங்கி பழகி வந்துள்ளனர். இதை அறிந்த ரமணா தனது மனைவி கதிரம்மாவை வேணுவுடனான பழக்கத்தை கைவிடுமாறு கண்டித்துள்ளார்.
இருப்பினும் கதிரம்மா வேணுவுடனான உறவை கைவிடாமல் இருந்துள்ளார். ஒரு நாள் வேலை முடிந்து வீட்டிற்கு சென்ற ரமணாவிற்கு உணவு கூட சமைத்து வைக்காமல் கதிரம்மா யாருடனோ போனில் பேசிக்கொண்டு இருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரமணா அவரிடம் சென்று போனை பறித்து பார்த்ததில் கதிரம்மா வேணுவுடன் பேசிக்கொண்டிருந்தது தெரியவந்தது. இதனால் ரமணாவுக்கும் கதிரம்மாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ரமணா கதிரம்மாவை அடித்ததாக சொல்லப்படுகிறது.
இது குறித்து தனது காதலனிடம் கூறிய கதிரம்மா வேணுவுடன் சேர்ந்து ரமணாவை கொலை செய்ய முடிவு செய்துள்ளார். அதன்படி இரவு ரமணா உறங்கிய பின் வேணுவை வீட்டிற்கு வரவழைத்த கதிரம்மா ரமணாவை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். பின்னர் வேணுவின் காரில் ரமணாவின் உடலை எடுத்துக் கொண்டு எங்காவது சென்று எரித்து விடலாம் என முடிவு செய்துள்ளனர். ஆனால் எங்கும் சரியான இடம் அமையாததால் இரண்டு நாட்கள் உடலை காரிலேயே வைத்து கொண்டு சுற்றியுள்ளனர்.
பின்னர் ஆள் நடமாட்டம் இல்லாத காட்டு பகுதிக்கு காரை எடுத்து சென்று அங்கு காரை நிறுத்திவிட்டு யாருக்கும் தெரியாமல் வீட்டிற்கு வந்து வழக்கம் போல வேலைகளை பார்த்துள்ளனர். கார் நின்ற வழியே ரோந்துக்கு சென்ற போலீசார் கார் தனியாக நிற்பதை பார்த்து சந்தேகமடைந்து காரை திறந்து பார்த்துள்ளனர். உள்ளிருந்த ரமணாவின் உடலை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது காரின் பதிவு எண்ணை வைத்து வேணுவை கைது செய்த போலீசார் அவர் அளித்த தகவலின் படி கதிரம்மாவையும் கைது செய்தனர். கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவி கணவனை கொன்று விட்டு எதுவும் தெரியாதது போல் வழக்கமான வேலைகளை பார்த்து வந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.