
புதுக்கோட்டை மாவட்டம், சிவபுரம் பகுதியில் புதுக்கோட்டை காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் 5000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். எல்கேஜி யுகேஜி முதல் பிளஸ் டூ வரை இந்த தனியார் பள்ளியில் மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த தனியார் பள்ளிக்கு என ஐம்பதுக்கு மேற்பட்ட பள்ளி வாகனங்கள் பள்ளி மாணவ மாணவிகளை கிராமங்களுக்கு சென்று பள்ளிக்கு அழைத்து வருவது பள்ளி முடிந்தபின் அவர்களை அவர்கள் வீட்டுக்கு கொண்டு போய் சேர்ப்பது போன்ற பணிகளை செய்து வருகிறது.
இப்பள்ளியில் நெய்வாசல் பட்டியைச் சேர்ந்த கார்பெண்டர் வேலை செய்யும் மதியழகன் பவிதா ஸ்ரீ தம்பதியருக்கு நான்கு வயதில் யுகேஜி படிக்கும் கைலாஷ்நாத் என்ற சிறுவன் படித்து வருகிறார். இவர் சொந்த ஊரான நெய் வாசல் பட்டியில் இருந்து பள்ளி வாகனத்தில் தினசரி பள்ளிக்கு வந்து செல்வது வழக்கம். அதே போல் இன்றும் பள்ளிக்கு வந்து விட்டு மாலை 5 மணி அளவில் சிவபுரம் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இருந்து புறப்பட்ட பள்ளி வாகனத்தில் கைலாஷ்நாத் வழக்கம் போல வீட்டுக்கு புறப்பட்டு வந்து கொண்டிருந்த போது ஓட்டுநர் அதிவிரைவாக வாகனத்தை இயக்கி வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பெருங்குடி கிராமத்தை அடுத்துள்ள வளைவில் ஓட்டுநர் வேகமாக பள்ளி வாகனத்தை இயக்கிய போது டிரைவருக்கு எதிர் வரிசையில் அமர்ந்திருந்த கைலாஷ்நாத் வேனில் இருந்து தூக்கி எறியப்பட்டார். இதை அறியாத வேன் டிரைவர் வேனை எதுவுமே நடக்காதது போல் அடுத்த ஊருக்கு பள்ளி சிறுவர்களை இறக்கிவிட படு வேகமாக சென்றதாக கூறப்படுகிறது.இந்நிலையில் வளைவில் பள்ளி வாகனத்தில் இருந்து தூக்கி எறியப்பட்ட கைலாசநாத்துக்கு தலை உட்பட உடலில் பல இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
அப்போது அந்த சாலை வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபர் சாலையில் ரத்த வெள்ளத்தில் பள்ளி சிறுவன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததை கண்டு பதறி துடித்து அவரை இரு சக்கர வாகனத்திலேயே தூக்கி கொண்டு புதுக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்து அங்கு முதலுதவி செய்த பின் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றான்.
5000 குழந்தைகளுக்கு மேல் படிக்கும் சிவபுரம் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 50க்கும் மேற்பட்ட பெரிய பள்ளி வாகனங்கள் மற்றும் சிறிய வாகனங்களை இயக்கி வரும் பள்ளி நிர்வாகம் பள்ளி மாணவர்களை ஏற்றி செல்லும் வாகனத்திற்கு கண்டிப்பாக ஓட்டுநருடன் ஓட்டுநர் உதவியாளரும் அவசியம் இருக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை மற்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஆகியோர் கூறியுள்ளனர் கண்டிப்பாக இதை பள்ளிகள் நடைமுறைப்படுத்த வேண்டும்.
இந்த நிலையில் பள்ளி வாகனத்தில் ஓட்டுனரின் உதவியாளர் இல்லாமல் பல பள்ளி வாகனங்கள் இந்த தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர் பள்ளி வாகனத்தில் இருந்து சிறுவன் கைலாசநாத் சாலையில் தூக்கி எறியப்பட்டது கூட தெரியாதஓட்டுனரின் அலட்சியத்தால் ஒரு சிறுவன் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடி வருவது பெற்றோரையும் பொதுமக்களையும் துயரத்தில் ஆழ்த்தி உள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.