
தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ஸ்டைல் வைத்துக்கொண்டு அன்றிலிருந்து இன்று வரை தனக்கான ரசிகர் பட்டாளத்தை விரிவுபடுத்திக் கொண்டே இருப்பவர் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்திய திரையுலகின் முன்னணி நடக்கிறாக வளம் வந்து கொண்டிருப்பவர். இவர் சினிமா துறையில் நடிக்க தொடங்கி 50 ஆண்டுகள் ஆன நிலையில், இதற்கு திரையுலகினர் மற்றும் அரசியல்வாதிகள் தனது சமூக வலைத்தளங்களில் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்தும், பாராட்டியும் பதிவிட்டு வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக துணைமுதலவர் மற்றும் நடிகரான உதயநிதி ஸ்டாலின், எதிர்க்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, இசையமைப்பாளர் அனிரூத், கவிஞர் வைரமுத்து, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் மற்றும் நடிகரும் ரஜினியின் நண்பருமான கமல் ஹசன் போன்றவர்கள் வலது தெரிவித்துள்ளனர்.
உதயநிதி ஸ்டாலின்
“திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த நமது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த ஐயாவை வாழ்த்துவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நாளை வெளியாகவுள்ள அவரது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கூலி திரைப்படத்தின் ஆரம்பக் காட்சியைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த சக்தி வாய்ந்த வெகுஜன பொழுதுபோக்கு படத்தை நான் மிகவும் ரசித்தேன், மேலும் இது எல்லா இடங்களிலும் உள்ள பார்வையாளர்களின் இதயங்களைக் கவரும் என்று நான் நம்புகிறேன்”. என்று ரஜினி 50- க்கு வாழ்த்து தெரிவித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
எடப்பாடி பழனிச்சாமி
திரையுலகில் தனது தனித்துவமான பாணியாலும், தனித்துவமான நடிப்பாலும், தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் சகோதரர் திரு. ரஜினிகாந்த் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார், அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன், மேலும் இந்த பொன்விழா ஆண்டில் நாளை வெளியாகவுள்ள சூப்பர் ஸ்டார் நடித்த கூலி படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன். என்று ரஜினி 50- க்கு வாழ்த்து தெரிவித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இசையமைப்பாளர் அனிரூத்
50 ஆண்டுகள். 1 சிம்மாசனம். 1 மனிதன். தலைவர் சூப்பர் ஸ்டாரின் பொன் விழாவை நாம் இறைவன் ஆசீர்வாதங்களுடனும் உங்கள் அனைவரின் அன்புடனும் கூலி படத்துடன் கொண்டாடுவோம். என்று ரஜினி 50- க்கு வாழ்த்து தெரிவித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன்
“ஒரு நடிகராக எனது முதல் அடிகளை உங்கள் பக்கத்தில் எடுத்து வைத்தேன். நீங்கள் எனது முதல் ஆசிரியர்களில் ஒருவர், ரஜினிகாந்த் ஐயா, தொடர்ந்து ஒரு உத்வேகமாகவும் இருக்கிறீர்கள். 50 ஆண்டுகால சினிமா ]மேஜிக்கை நிறைவு செய்ததற்கு வாழ்த்துக்கள்.”என்று ரஜினி 50- க்கு வாழ்த்து தெரிவித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கவிஞர் வைரமுத்து
“50 ஆண்டுகள் ஒரே துறையில் உச்சத்தில் இருப்பது அபூர்வம், ரஜினி நீங்கள் ஓர் அபூர்வ ராகம், புகழும் பொருளும் உங்கள் உழைப்புக்கு கிடைத்த கூலி, தொடரட்டும் உங்கள் தொழில் நிலைக்கட்டும் உங்கள் புகழ்"இளமை இனிமேல் போகாது முதுமை எனக்கு வாராது" என்று முத்து படத்தில் எழுதிய முத்திரை வரியால் வாழ்த்துகிறேன்” என்று ரஜினி 50- க்கு வாழ்த்து தெரிவித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
நடிகர் கமல்ஹாசன்
“சினிமாவில் அரை நூற்றாண்டு கால திறமையைக் குறிக்கும் வகையில், என் அன்பு நண்பர் ரஜினிகாந்த் இன்று சினிமாவில் 50 வருடங்கள் கொண்டாடுகிறார். நமது சூப்பர் ஸ்டாரை பாசத்துடனும் பாராட்டுடனும் கொண்டாடுகிறேன், மேலும் இந்தப் பொன் விழாவிற்கு ஏற்றவாறு கூலி உலகளாவிய வெற்றியைப் பெற வாழ்த்துகிறேன்” என்று ரஜினி 50- க்கு வாழ்த்து தெரிவித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பிரேமலதா விஜயகாந்த்
“திரைத்துறையில் 50 ஆண்டுகாலம் நிறைவு செய்திருக்கிறார் ரஜினிகாந்த் அவர்கள்... அவருக்கு என்னுடைய வாழ்த்துக்களை கேப்டன் சார்பாகவும் என் சார்பாகவும் மற்றும் தேமுதிக தொண்டர்கள் சார்பாகவும் தெரிவித்துக் கொள்கிறேன். கேப்டன் மீது பேரன்பு கொண்டவர் ரஜினிகாந்த் என்பது நாடறியும்.
கேப்டன் இருந்திருந்தால் நிச்சயமாக ரஜினிகாந்த்திற்கு ஐம்பதாவது ஆண்டு விழா விமர்சையாக கொண்டாடி இருப்பார். கேப்டன் மீதும் எங்கள் குடும்பத்தினர் மீதும் பேரன்பு கொண்டவர்கள் ரஜினிகாந்த் அவர்களும் அவரது குடும்பத்தினரும்.
திரை உலகில் உள்ள சங்கங்கள் எல்லாம் இணைந்து,சூப்பர் ஸ்டாராக ஐம்பது ஆண்டு காலம், தமிழ் திரையுலகில் வலம் வந்த ரஜினிகாந்த் அவர்களுக்கு மிகப்பெரிய பாராட்டு விழா எடுக்க வேண்டும். திரை உலகத்தில் உள்ள அனைவரும் இணைந்து இந்தப் பாராட்டு விழா நடத்தினால் சிறப்பாக இருக்கும் என கேட்டுக்கொள்கிறேன்”.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.