அஜீத்தின் GBU திரைப்படம்... இது ஒரு "கேன்சர்" மனநிலை - விளாசித் தள்ளிய "அராத்து"!

ஒரு ரசிகர், "முதல் 20 நிமிடங்கள் தியேட்டரில் விசில் சத்தம் தான்! GBU மங்காத்தாவை மிஞ்சிடுச்சு!" என்று பதிவிட்டார். மற்றொரு பதிவில், "அஜீத்தின் ஸ்க்ரீன் பிரசன்ஸ் அட்டகாசம், ஆதிக்கின் ஃபேன்பாய் செலிப்ரேஷன்!"
gbu
gbuAdmin
Published on
Updated on
3 min read

அஜீத் குமார் நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஏப்ரல் 10 அன்று வெளியான "Good Bad Ugly" (GBU) திரைப்படம் பார்வையாளர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. அஜீத்தின் தீவிர ரசிகர்கள் இப்படத்தை "விண்டேஜ் அஜீத் கம்பேக்" என்று கொண்டாட, பொதுப் பார்வையாளர்கள் கதை மற்றும் திரைக்கதையின் பலவீனங்களை சுட்டிக்காட்டியுள்ளனர்.

படம் முதல் நாளில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 28.5 கோடி வசூலித்து நல்ல தொடக்கத்தைப் பெற்றாலும், இரண்டாம் நாளில் வசூல் சுமார் ரூ. 10 கோடியாக குறைந்தது.

ரசிகர்கள் சமூக வலைதளங்களில் படத்தின் ஆக்‌ஷன் காட்சிகள், அஜீத்தின் ஸ்டைல், மற்றும் பழைய படங்களின் குறிப்புகளை (references) பாராட்டியுள்ளனர்.

ஒரு ரசிகர், "முதல் 20 நிமிடங்கள் தியேட்டரில் விசில் சத்தம் தான்! GBU மங்காத்தாவை மிஞ்சிடுச்சு!" என்று பதிவிட்டார். மற்றொரு பதிவில், "அஜீத்தின் ஸ்க்ரீன் பிரசன்ஸ் அட்டகாசம், ஆதிக்கின் ஃபேன்பாய் செலிப்ரேஷன்!" என்று குறிப்பிடப்பட்டது.

இருப்பினும், பொதுப் பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்கள் படத்தின் கதை ஆழமின்மை, தேவையற்ற மிகைப்படுத்தல்கள், மற்றும் லாஜிக் இல்லாத காட்சிகளை விமர்சித்துள்ளனர்.

ஒரு பயனர், "கதை இல்லை, எல்லாம் ஃபேன்களுக்காக மட்டுமே. பொதுவான ஆடியன்ஸுக்கு இது பிடிக்காது," என்று கருத்து தெரிவித்தார். மற்றொருவர், "ஒரு சண்டைக் காட்சி எதிர்பாராமல் காமெடியாகி, சிரிப்பை அடக்க முடியலை!" என்று கிண்டலடித்தார்.

படத்தில் அஜீத் ஒரு முன்னாள் கேங்ஸ்டராக (ரெட் டிராகன்) நடித்துள்ளார், அவரது மகன் கடத்தப்பட்டதால் மீண்டும் வன்முறை உலகிற்கு திரும்புகிறார். திரிஷா, அர்ஜுன் தாஸ், ஜாக்கி ஷ்ராஃப் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஆனால், பலர் துணை கதாபாத்திரங்கள் பயன்படுத்தப்படவில்லை என்று குறை கூறியுள்ளனர். மூன்றாம் நாளில் படம் ரூ. 62.75 கோடி வசூலித்து, வார இறுதியில் மீண்டும் ஏற்றம் கண்டது. இந்நிலையில், பிரபல. எழுத்தாளர் அராத்து இந்த படத்தை மிகக் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்துள்ளார்.

அராத்துவின் விமர்சனம்: GBU - அஜீத்தின் காபரே டான்ஸ்

"இது 2 கே கிட்ஸுக்கான படம். இந்தப் படம் புடிக்கலன்னா, வயசாயிடிச்சின்னு அர்த்தம், தலைமுறை இடைவெளி , இதுதான் புது போக்கு என்றெல்லாம் பஞ்ச் டயலாக்குகள் பரவலாகப் பார்த்தேன்.

தமிழ் சினிமா எப்போதும் மாற்றங்களைக் கண்டே வந்திருக்கிறது. எந்தப் புதுமையையும் தமிழ் மக்கள் வாரி அணைத்துக் கொள்வார்கள்.

எம் ஜி ஆர் - சிவாஜி காலப் படங்களுக்குப் பிறகு பாலச்சந்தர் , பாரதிராஜா , பாலு மகேந்திரா உள்ளிட்ட புது அலை இயக்குநர்கள் சினிமா போக்கை மாற்றி வேறு ஒரு புது திரைமொழியில் எடுத்த போது அப்போதிருந்த அங்கிள்கள், ஆண்டிகள், தாத்தா பாட்டிகள் யாரும் முகம் சுளிக்கவில்லை. சூப்பர் ஹிட் தான் ஆக்கினார்கள்.

மட்டுமல்லாமல் இந்த இயக்குநர்கள் சினிமாவை , அதன் தரத்தை கீழே இழுக்கவில்லை. முன்பிருந்ததை விட மேம்படுத்தினார்கள்.

அடுத்து மணிரத்னம் முற்றிலும் புதிதான ஒரு திரைமொழியோடு வந்தபோதும் தலைமுறை இடைவெளி எல்லாம் ஏற்படவில்லை. டெக்னிக்கலாகவும் தமிழ் சினிமாவை மணிரத்னம் மேம்படுத்தி முற்றிலும் வேறு ஒரு ஃபார்மேட்டில் கொடுத்த போதும், தாத்தா பாட்டி முதற்கொண்டு அனைவரும் கொண்டாடவே செய்தனர். அதே போலத்தான் அடுத்து ஷங்கர் , தியாகராஜன் குமாரராஜா , மிஷ்கின் போன்றவர்களின் விஷயத்திலும் நடந்தது.

இவர்கள் அனைவரும் புதுமைகளையும் மாற்றங்களையும் கொண்டுவந்தாலும், அசட்டு பிசட்டு அருவருக்கத்தக்க வேலைகளை செய்யவில்லை.

ஜி பி யூ வில் ஆதிக் என்ன செய்திருக்கிறார்? என்ன கண்றாவி என அவருக்கேத் தெரியாத ஏதோ ஒரு junk ஐ கொட்டி வைத்திருக்கிறார்.

இந்த கண்றாவி கலாச்சாரம் லோகேஷ் கனகராஜ் ஆரம்பித்து வைத்தது. KGF இல் ஆரம்பித்த இந்த ஹேங் ஓவர் எல்லை மீறி போய்க்கொண்டு இருக்கிறது. பெரிய பெரிய துப்பாக்கி இல்லாமல் அதைப்போன்ற கோஷ்டிகளுக்கு படம் எடுக்கவே தெரியாது.

படம் முழுக்க பில்ட் அப் சீன்கள் என தியேட்டரில் உள்ளவர்கள் மீது கழனித்தண்ணியை ஊற்றிக்கொண்டே இருக்கிறார்கள்.

அஜீத்தை விதம் விதமாகக் காட்டுவதற்கும் , படம் முழுக்க அவருக்கு பில்ட் அப் சீன்கள் இருப்பதற்கும் காபரே டேன்ஸுக்கும் என்ன வித்தியாசம்?

அஜீத் ஃபேன்ஸ் சேட்டிஸ்ஃபை ஆகிறார்களாம். கதை , திரைக்கதை , லாஜிக் எல்லாம் வேண்டாமாம். அஜீத்தை விதம் விதமாகப் பார்த்தால் போதுமாம். போர்ன் மூவிதான் இப்படி இருக்கும்.

போர்ன் படங்களிலாவது எதிர்பாலினத்தை விதம் விதமாகப் பார்த்து ஆர்கஸம் அடைவார்கள். ஜி பி யூ வில் ஆண்களே அஜித்தை விதம் விதமாகப் பார்த்து ஆர்கஸம் அடைகிறார்கள் என்பது போர்ன் மூவி வரலாற்றில் ஒரு புது பாய்ச்சலாக இருக்கிறது.

இடைவேளையில் வில்லன்களின் பேங்கை பாம் வைத்துத் தகர்த்து ,சொக்கபபனை கொளுத்துகிறார் அஜீத். க்ளைமேக்ஸில் அந்த பேங்க் எதிரேதான் சண்டை போட்டுக்கொள்கிறார்கள். பாம் வைத்துத் தகர்க்கும் சீனுக்கு முன்பே க்ளைமேக்ஸ் ஷூட் செய்து விட்டார்கள் போல. இந்த லட்சணத்தில் தான் படம் முழுக்க எடுத்திருக்கிறார்கள்.

ஸ்பெயினில் கணக்கு வழக்கில்லாமல் குறைந்தது 1000 பொணங்கள் விழுந்திருக்கும். ஸ்பெயின் போலீஸ் அதை எல்லாம் கொசு பிணங்களாக நினைத்துக்கொண்டு , அஜீத் மகன் கொலை செய்ததாகக் கருதப்படும் ஒரு பிணத்துக்காக சீரியஸாக அரெஸ்ட் செய்து கேஸ் நடத்திக்கொண்டு இருக்கிறது. அந்தப் பிணமும் வேறு பெண்ணாம். அது கூடத் தெரியாமல் அசமஞ்சமாக ஸ்பெயின் போலீஸ் இருக்குமாம்.

ஆதிக் பின் நவீனத்துவத்தைப் பற்றி அரைகுறையாக ஏதோ படித்திருப்பார் போல. அது செரிக்காமல் படம் முழுக்க அதையும் ஆங்காங்கே கழிந்து வைத்திருக்கிறார்.

இதைப்போன்ற படங்கள் ஹிட் ஆகிறது என்றால் அது கடுமையான ரசனைக்குறைவுதான். இந்த சீரழிவு திடீரென வரவில்லை. செய்திகள் வாசிப்பது , புதினங்கள் வாசிப்பது , இலக்கியம் வாசிப்பது என எந்தப் பழக்கமும் இல்லாத ஒரு ஜங்க் தலைமுறை ரசிகர்களும், இயக்குநர்களும் இணைந்து கொஞ்சம் கொஞ்சமாக கஷ்டப்பட்டு முயன்று இங்கே கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார்கள்.

இதில் சோகம் என்னவென்றால், இந்த ஜோதியில் ஐக்கியம் ஆகவில்லை என்றால் நம்மை கிழ போல்ட் எனச் சொல்லிவிடுவார்கள் என பயந்து நல்ல ரசனைக்காரர்களும் புத்திசாலிகளும் இந்த கோஷ்டியில் இணைவதுதான்.

இது ஒரு கேன்ஸர். என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com