தக்காளி சட்னி இப்படி அரைச்சு கொடுங்க! அப்புறம் டெய்லி இதையே கேட்பாங்க!

தக்காளி சட்னி உங்க வாழ்க்கையில எத்தனையோ முறை அரைச்சு இருப்பீங்க. ஒருமுறை இப்படி ட்ரை செய்து பாருங்க.
Best-Tomato-Chutney-Recipe
Best-Tomato-Chutney-Recipe
Published on
Updated on
1 min read

தக்காளி சட்னி உங்க வாழ்க்கையில எத்தனையோ முறை அரைச்சு இருப்பீங்க. ஒருமுறை இப்படி ட்ரை செய்து பாருங்க.

தக்காளி சட்னி - தேவையான பொருட்கள் (4 பேருக்கு)

  • தக்காளி - 4 (நல்ல பழுத்த மீடியம் சைஸ்)

  • வெங்காயம் - 1 (பெரியது, நறுக்கியது)

  • பச்சை மிளகாய் - 2 அல்லது 3

  • பூண்டு - 4 பல்

  • காய்ந்த மிளகாய் - 2

  • கடுகு - 1 டீஸ்பூன்

  • உளுத்தம் பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்

  • கறிவேப்பிலை - 1 கொத்து

  • எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன் (நல்லெண்ணெய் அல்லது சமையல் எண்ணெய்)

  • உப்பு - தேவையான அளவு

  • பெருங்காயம் - ஒரு சிட்டிகை

முதல்ல தக்காளி, வெங்காயத்தை நல்லா கழுவி, பொடியா நறுக்கிக்கோங்க. பச்சை மிளகாயை கீறி வைங்க. பூண்டு இருந்தா, தோல் உரிச்சு தயாரா வச்சுக்கோங்க.

ஒரு கடாயில எண்ணெய் ஊத்தி, காய்ந்ததும் கடுகு போட்டு வெடிக்க விடுங்க. பிறகு உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயம் சேர்த்து பொன்னிறமாக வறுங்க. கறிவேப்பிலை போட்டு ஒரு தாளிங்க வாசனை வரட்டும்.

இப்போ வெங்காயத்தை போட்டு, பொன்னிறமாக வதக்குங்க. பச்சை மிளகாயையும், பூண்டையும் சேர்த்து ஒரு நிமிஷம் வதக்கவும். வெங்காயம் மென்மையாகி, வாசனை வரணும்.

தக்காளியை சேர்த்து, உப்பு போட்டு நல்லா கிளறுங்க. தக்காளி மசிய ஆரம்பிக்கும் வரை மிதமான தீயில வேக விடுங்க. ஒரு 5-7 நிமிஷம் போதும், தக்காளி நல்லா சாஃப்ட்டா, ஜூஸியா மாறிடும்.

இந்த மிக்ஸை ஆற விடுங்க. சூடு இருக்கும்போது அரைச்சா, சட்னி தண்ணியா ஆயிடும்.

மிக்ஸியில இந்த மசாலாவை போட்டு, கொரகொரப்பா அரைங்க. ரொம்ப மையமா ஆக்கிடாதீங்க, சட்னிக்கு ஒரு டெக்ஸ்சர் வேணும். தண்ணி சேர்க்க வேண்டாம், தக்காளியோட ஜூஸ் போதும்.

அரைச்ச சட்னியை ஒரு பவுலுக்கு மாற்றி, கொத்தமல்லி இலை தூவி அலங்கரிங்க. தேவைப்பட்டா ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊத்தி, கடுகு கொஞ்சம் போட்டு தாளிச்சு அதில் ஊற்றுங்க.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com