
2025-ம் ஆண்டு ஜூலை 28-ம் தேதி, இந்திய இரு சக்கர வாகன சந்தையில் ஒரு பழைய பெயர் புதிய மின்சார உருவத்தில் மறுபிறவி எடுத்திருக்கிறது. கைனெடிக் நிறுவனம், தனது புகழ்பெற்ற DX மாடலை மின்சார ஸ்கூட்டராக (Kinetic DX EV) மீண்டும் அறிமுகப்படுத்தியிருக்கிறது. 1980-களில் இந்தியாவில் இளைஞர்களின் மனதை கொள்ளைகொண்ட கைனெடிக் ஹோண்டா DX-இன் நவீன மறுவடிவமாக இது வந்திருக்கிறது. இந்த ஸ்கூட்டர், பழைய ஸ்டைலையும் புதிய தொழில்நுட்பத்தையும் கலந்து, இந்திய குடும்பங்களுக்கு ஏற்ற ஒரு மின்சார வாகனமாக உருவாக்கப்பட்டிருக்கிறது.
கைனெடிக் DX EV, இரண்டு வகைகளில் (DX மற்றும் DX+) வந்திருக்கிறது. DX விலை ₹1,11,499, DX+ விலை ₹1,17,499 (எக்ஸ்-ஷோரூம், புனே). இதற்கு முன்பதிவு ₹1,000 செலுத்தி Kinetic-இன் இணையதளத்தில் செய்யலாம். முதல் ஆண்டு 35,000 யூனிட்களுக்கு மட்டுமே இது கிடைக்கும், டெலிவரி செப்டம்பர் 2025-ல் தொடங்கும்.
1984-ல் கைனெடிக் ஹோண்டா DX ஆட்டோமேட்டிக் ஸ்கூட்டராக இந்தியாவில் அறிமுகமானபோது, அதன் ஸ்டைலிஷ் லுக், எளிமையான ஓட்டுதல் இளைஞர்களை கவர்ந்தது. இப்போது, 41 ஆண்டுகள் கழித்து, இந்த மின்சார DX, அந்த பழைய நினைவுகளை மீட்டெடுக்கிறது, ஆனால் நவீன தொழில்நுட்பத்துடன். (செமல்ல!)
கைனெடிக் DX EV-இன் டிசைன், பழைய ஹோண்டா DX-இன் உருவத்தை நினைவூட்டுகிறது, ஆனால் இத்தாலிய டிசைனர்களின் உதவியுடன் இது மாடர்னாக மாறியிருக்கிறது. முன்பக்கத்தில் மூன்று-ஸ்லாட் கிரில், மெட்டல் பாடி, விசாரில் ஒளிரும் கைனெடிக் லோகோ ஆகியவை இதை ஸ்டைலிஷாக்குது.
DX+ வகைக்கு ஐந்து கலர்கள் (ரெட், ப்ளூ, ஒயிட், சில்வர், பிளாக்) கிடைக்கும், ஆனால் DX-க்கு சில்வர் மற்றும் பிளாக் மட்டுமே உண்டு. 37 லிட்டர் அண்டர்-சீட் ஸ்டோரேஜ், ஒரு ஃபுல்-ஃபேஸ் ஹெல்மெட், ஒரு ஹாஃப்-ஃபேஸ் ஹெல்மெட், கொஞ்சம் காய்கறி எல்லாம் போடற அளவுக்கு பெருசு. இதோடு, பெரிய ஃப்ளோர்போர்டு இருக்கிறது, ஒரு கேஸ் சிலிண்டரைக் கூட வைக்கலாம்! இது இந்திய குடும்பங்களுக்கு ரொம்ப பிராக்டிக்கலான விஷயம்.
இந்த ஸ்கூட்டரோட முக்கிய பலம் அதோட 4.8kW BLDC ஹப் மோட்டார். இது 90 கிமீ/மணி வேகம் வரை செல்லும். 2.6kWh LFP பேட்டரி (Range-X தயாரிப்பு) 3,500 சார்ஜ் சைக்கிள்களை தாங்கும், இது பொதுவான NMC பேட்டரிகளை விட நான்கு மடங்கு அதிக ஆயுள் கொண்டது. DX வகை 102 கிமீ ரேஞ்ச் கொடுக்கும், DX+ வகையில் "Cruise Lock" டெக்னாலஜி இருக்கு, இது 25-30 கிமீ/மணி வேகத்தில் ஓட்டினால் 150 கிமீ வரை ரேஞ்ச் கொடுக்கும்.
சார்ஜிங் நேரம்? 0-50% இரண்டு மணி நேரம், 0-80% மூன்று மணி நேரம், முழு சார்ஜுக்கு நான்கு மணி நேரம். மூன்று ரைடிங் மோட்கள் (Range, Power, Turbo), ஹில்-ஹோல்ட், ரிவர்ஸ் மோட், 22-டிகிரி மலை ஏறும் திறன் ஆகியவை இதை எல்லா சூழல்களுக்கும் ஏற்றதாக்குது. 12-இன்ச் டியூப்லெஸ் டயர்கள், 165மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ், 220மிமீ முன் டிஸ்க் பிரேக், 130மிமீ பின்புற டிரம் பிரேக் ஆகியவை சாலையில் பாதுகாப்பையும் கட்டுப்பாட்டையும் கொடுக்குது.
DX+ வகையில் "Telekinetics" சூட் இருக்கு, இதுல ஆன்டி-தெஃப்ட் அலர்ட், GPS டிராக்கிங், ஜியோ-ஃபென்ஸிங், ரிமோட் லாக்/அன்லாக், "Find My Kinetic" போன்றவை இருக்கு. இதோடு, "My Kiney Companion" என்ற AI வாய்ஸ் அசிஸ்டன்ட் 16 இந்திய மொழிகளில் பேசி, ஸ்கூட்டர் நிலையை சொல்லி, பிறந்தநாள் வாழ்த்து கூட சொல்லும்!. 8.8-இன்ச் LCD டிஸ்பிளே, ப்ளூடூத் மூலம் மியூசிக் பிளேபேக், வாய்ஸ் நேவிகேஷன், Kinetic Assist ஸ்விட்ச் ஆகியவை இதை ஸ்மார்ட்டாக்குது. Easy Key (கீலெஸ் ஆக்சஸ்), Easy Charge (ரிட்ராக்டபிள் சார்ஜர்), Easy Flip (ஒரு டச்சில் பில்லியன் ஃபுட்ரெஸ்ட்) போன்றவை இதை வசதியாக்குது.
கைனெடிக் DX EV, 3 வருடம் அல்லது 30,000 கிமீ வாரன்டியுடன் வருது, இதை 9 வருடம் அல்லது 1 லட்சம் கிமீ வரை நீட்டிக்கலாம், இது இந்திய EV சந்தையில் ஒரு பெரிய விஷயம். இந்த ஸ்கூட்டர், கைனெடிக் வாட்ஸ் அண்ட் வோல்ட்ஸ் நிறுவனத்தின் 87,000 சதுர அடி தொழிற்சாலையில் 99% இந்தியாவில் தயாரிக்கப்படுது. இதற்காக ₹72 கோடி முதலீடு செய்யப்பட்டு, மேலும் ₹177 கோடி உற்பத்தியை அதிகரிக்க திட்டமிடப்பட்டிருக்கு.
மார்க்கெட்டில் கைனெடிக் DX EV, TVS iQube, Bajaj Chetak, Ather Rizta, Vida VX2 போன்றவற்றுடன் போட்டியிடுது. இதன் விலை, ரேஞ்ச், ஸ்மார்ட் வசதிகள் இதை குடும்பங்களுக்கு ஏற்றதாக்குது. ஆனால், Ather Rizta, Ola S1 Pro போன்றவை இன்னும் சில கூடுதல் வசதிகளை (எ.கா., TFT டிஸ்பிளே) கொடுக்குது, இது ஒரு சவாலாக இருக்கலாம். இந்தியாவில் மின்சார ஸ்கூட்டர் சந்தை 2025-ல் வேகமாக வளர்ந்து வருது, கைனெடிக் இந்த நேரத்தில் பழைய பிராண்ட் மதிப்பையும் புதிய தொழில்நுட்பத்தையும் கலந்து ஒரு நல்ல முயற்சி செய்திருக்கு. நிச்சயம் வரவேற்கலாம்!
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.