"20 முறை வேக வச்சாச்சு...மட்டன் வேகவே இல்ல" ஆந்திர போலீசாரிடம் வந்த வினோத புகார்...!

கிட்டத்தட்ட 20 முறை முயன்ற பிறகும், அந்த இறைச்சி கடினமாகவும், வேகாமலும் இருந்திருக்கிறது. இதனால் கோபமடைந்த ஹாஜி..
"20 முறை வேக வச்சாச்சு...மட்டன் வேகவே இல்ல" ஆந்திர போலீசாரிடம் வந்த வினோத புகார்...!
Published on
Updated on
1 min read

தான் வாங்கிய ஆட்டுக்கறியை 20 முறைக்கு மேலாக வேகவைத்தும் வேகவில்லை என்று காவல் நிலையத்திற்கு வந்த வினோத புகாரை தீர்த்து வைத்த ஆந்திர போலீஸ்.

ஆந்திரப் பிரதேசத்தின் அனந்தபூர் மாவட்டத்தில், தாடிபத்ரி நகர காவல் நிலையத்திற்கு, சோடாலா ஹாஜி என்ற நபர் கையில் ஒரு பாத்திரத்துடன் வந்துள்ளார். காவலர்களிடம் தான் கொண்டுவந்த பாத்திரத்தை திறந்துகாட்டி காவலர்களிடம் புகாரளித்துள்ளார். இந்த அசாதாரண புகாரை கேட்ட ஆய்வாளர் ஆனந்த ராவ் திகைத்துப்போனார். அதில் அவர், தான் வாங்கிய ஆட்டுக்கறியை 20 முறை வேகவைத்தபோதும் அது வேகவில்லை என்று காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

தாடிபத்ரியில் உள்ள புட்லூரு சாலையில் வசிக்கும் புகார்தாரரான சோடாலா ஹாஜி, தலைக்கறியை வாங்கியிருக்கிறார். மேலும், அவர் தலைக்கறி குழம்பு செய்து சாப்பிடும் ஆர்வத்தில் அவர் சமைக்கத் தொடக்கிருக்கிறார். ஆனால், அவருக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக, கிட்டத்தட்ட 20 முறை முயன்ற பிறகும், அந்த இறைச்சி கடினமாகவும், வேகாமலும் இருந்திருக்கிறது. இதனால் கோபமடைந்த ஹாஜி, சமையல் பாத்திரம் முழுவதையும் நேராகக் காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்று, விற்பனையாளர் மீது புகார் அளித்துள்ளார். முதலில் காவலர்கள் புகாரை கண்டு அதிர்ச்சியடைந்தாலும் பின்பு அதில் தலையிட்டு தீர்வு காண முடிவு செய்தனர்.

இறைச்சி விற்பனையாளரை அழைத்து காவலர்கள் பேசியபிறகு, ஆய்வாளர் ஆனந்த ராவ் அந்த பிரச்சனையை தீர்த்து வைத்தார். இந்த இறைச்சிக்கு பதிலாக வேறொரு இறைச்சியை தருவதாக இறைச்சி விற்பனையாளர் ஒப்புக்கொண்டார். ஒருவேளை வயது முதிர்ந்த ஆடாக இருந்திருக்கலாம். அதனால்தான் வேக வைக்கமுடியவில்லை என்றும் சிலர் கூறுகின்றனர். இறுதியாக, ஆய்வாளர் ஆனந்த ராவ் இந்த புகாரை சுமூகமாக தீர்த்துவைத்தார். இந்த வினோதமான புகார் காவல்துறையினர் உட்பட அப்பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தியது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com