
தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு (NIRF) என்பது இந்தியாவில் உயர்கல்வி நிறுவனங்களை மதிப்பீடு செய்து தரவரிசைப்படுத்துவதற்காக கல்வி அமைச்சகத்தால் 2015-ல் தொடங்கப்பட்ட ஒரு முக்கியமான முயற்சியாகும். ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்படும் இந்த தரவரிசை, மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்களுக்கு சிறந்த கல்வி நிறுவனங்களைத் தேர்ந்தெடுக்க உதவுகிறது. 2025-ம் ஆண்டுக்கான NIRF தரவரிசையில் பல புதிய மாற்றங்களும், ரேங்கிங்ஸ்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
2025-ஆம் ஆண்டு NIRF தரவரிசையில் மிக முக்கியமான மாற்றங்களில் ஒன்று, நிலையான வளர்ச்சி இலக்குகள் (Sustainable Development Goals - SDG) என்ற புதிய வகையை அறிமுகப்படுத்தியிருப்பது. இது, கல்வி நிறுவனங்களின் சமூக மற்றும் சுற்றுச்சூழல் பொறுப்புகளை மதிப்பீடு செய்யும் ஒரு புதிய ரேங்கிங்காகும்.
மற்றொரு முக்கிய மாற்றம், ஆராய்ச்சி மற்றும் தொழில்முறை பயிற்சிகள் (Research and Professional Practices) ரேங்கிங்கில் அறிமுகப்படுத்தப்பட்ட எதிர்மறை மதிப்பெண் முறை. இதுவரை இல்லாத வகையில், ஆராய்ச்சி பத்திரிகைகளில் இருந்து திரும்பப் பெறப்பட்ட (retracted) ஆய்வுக்கட்டுரைகளுக்கு எதிர்மறை மதிப்பெண்கள் வழங்கப்படும்.
இந்த மாற்றம், ஆராய்ச்சியில் நெறிமுறைகளைப் பின்பற்றுவதை உறுதி செய்யும் நோக்கத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தேசிய தரநிர்ணய வாரியத்தின் (NBA) தலைவர் அனில் சகஸ்ரபுத்தே இதற்காக ஒரு ஃபார்முலா உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இந்த ஆண்டு இந்த எதிர்மறை மதிப்பெண் மிகக் குறைவாக இருந்தாலும், வரும் ஆண்டுகளில் இதன் தாக்கம் அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளார்.
இதுதவிர, பல இந்திய மொழிகளில் கற்பித்தல், Indian Knowledge Systems பாடப்பிரிவுகள் மற்றும் multiple entry and exit systems செயல்படுத்துவது போன்ற முயற்சிகளும் இந்த ஆண்டு மதிப்பீட்டில் கருத்தில் கொள்ளப்படுகின்றன. இவை, கல்வி நிறுவனங்களை உலகளாவிய தரத்திற்கு உயர்த்துவதற்கு உதவுகின்றன.
NIRF தரவரிசை ஐந்து முக்கிய Rankings-களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படுகிறது: கற்பித்தல், கற்றல் மற்றும் வளங்கள் (Teaching, Learning and Resources), ஆராய்ச்சி மற்றும் தொழில்முறை பயிற்சிகள் (Research and Professional Practices), பட்டப்படிப்பு விளைவுகள் (Graduation Outcomes), Outreach and Inclusivity மற்றும் பொது உணர்வு (Perception). இந்த Rankings, ஒரு நிறுவனத்தின் ஒட்டுமொத்த தரத்தை மதிப்பீடு செய்ய உதவுகின்றன.
தரவரிசை செயல்முறை முதலில் ஆண்டுக்கான கட்டமைப்பை இறுதி செய்வதுடன் தொடங்குகிறது. பின்னர், நிறுவனங்கள் முன்பதிவு மற்றும் பதிவு செயல்முறைக்கு உட்படுத்தப்படுகின்றன. அதன்பிறகு, அவர்கள் தங்கள் ஆசிரியர்கள், மாணவர்கள், நிதி, ஆராய்ச்சி, மேற்கோள்கள், காப்புரிமைகள் மற்றும் உள்கட்டமைப்பு பற்றிய விரிவான தரவுகளை தரவு சேகரிப்பு முறைமை (Data Capturing System - DCS) மூலம் பதிவேற்ற வேண்டும்.
இந்தத் தரவுகள் அனைத்தும் நிறுவனங்களின் இணையதளங்களில் பொதுவில் வெளியிடப்பட வேண்டும், இதன்மூலம் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படுகிறது. பின்னர், இந்தத் தரவுகள் பொது கருத்துகளுக்கு உட்படுத்தப்பட்டு, தேவைப்பட்டால் திருத்தங்கள் செய்யப்படுகின்றன. இறுதியாக, ஒரு ஆய்வு மூலம் peer perception சேகரிக்கப்பட்டு, தரவரிசை வெளியிடப்படுகிறது.
இந்த செயல்முறை மிகவும் ஒழுங்காக கட்டமைக்கப்பட்டு, வெளிப்படையாகவும் இருப்பதால், மாணவர்களுக்கு நம்பகமான தகவல்களை வழங்குவதற்கு உதவுகிறது. ஆனால், சில விமர்சனங்களும் உள்ளன. உதாரணமாக, தரவு சமர்ப்பிப்பின் துல்லியம் மற்றும் Rankings முழுமையான தன்மை குறித்து சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
NIRF தரவரிசை, இந்திய உயர்கல்வி முறையை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது நிறுவனங்களுக்கு இடையே ஆரோக்கியமான போட்டியை ஊக்குவிக்கிறது. மேலும் அவற்றை உலகளாவிய தரத்திற்கு உயர்த்த உதவுகிறது. மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள், தங்கள் கல்வி முடிவுகளை எடுக்க இந்த தரவரிசையை ஒரு வழிகாட்டியாக பயன்படுத்துகின்றனர். மேலும், நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி அமைப்புகள் இந்த தரவரிசையைப் பயன்படுத்தி சிறந்த நிறுவனங்களை அடையாளம் காண்கின்றனர்.
ஆனால், 2025-ல் மதுரை உயர்நீதிமன்றம், NIRF தரவரிசையை வெளியிடுவதற்கு தற்காலிக தடை விதித்தது, இந்த முறையின் நம்பகத்தன்மை குறித்து விவாதங்களை எழுப்பியுள்ளது. ஒரு பொது நல மனுவில், இந்த தரவரிசை முறை மாணவர்களை தவறாக வழிநடத்தலாம் என்றும், உயர்கல்வியின் தரத்தை பாதிக்கலாம் என்றும் வாதிடப்பட்டது. இந்த தடை முழுமையாக செயல்படவில்லை என்றாலும், NIRF-இன் வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மை குறித்து மேலும் ஆய்வு செய்ய வேண்டிய அவசியத்தை இது உணர்த்துகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.