ராகுல் காந்தியை மிரட்டுகிறதா தேர்தல் ஆணையம்? இல்லாததை சொல்லும் கில்லாடிகள் பாஜக - அலிம் அல் புஹாரி Exclusive!

இது போன்ற பொய்யான முகவரியில் இருந்து வந்த ஓட்டுகள் மட்டும் 10,452 வாக்குகள், வாக்காளர்களின் புகைப்படங்களை குறிப்பிட்ட அளவை விட சிறியதாகவும்
ராகுல் காந்தியை மிரட்டுகிறதா தேர்தல் ஆணையம்? இல்லாததை சொல்லும் கில்லாடிகள் பாஜக -  அலிம் அல் புஹாரி Exclusive!
Published on
Updated on
2 min read

சமீபத்தில் இந்திய தேர்தல் ஆணையம் பீகாரில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தின் படி 52 லட்சம் வாக்காளர்களை நீக்கியது. இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி தேர்தல் ஆணையம் முறைகேடு செய்திருப்பதாக சில ஆதாரங்களை காட்டி குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் பற்றியும் அதற்கு தேர்தல் ஆணையம் பதிலளித்தது குறித்தும் நமது மாலை முரசு செய்தி குழுவிடம் இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் அலிம் அல் புஹாரி Exclusive-ஆக பேசியுள்ளார்.

அதில் “ ராகுல் காந்தி அவர்கள் தேர்தல் ஆணையத்தின் முறைகேடுகளை அம்பலப்படுத்தி காட்டி இருக்கிறார். இதில் மிக முக்கியமான முறைகேடு பெங்களூருவில் இருக்கும் ஒரு தொகுதியை மட்டும் எடுத்து அதை அம்பலப்படுத்தியுள்ளார். இதற்கு முன் நாம் ஓட்டு ஜிஹாத் என்பதை கேள்விப்பட்டு இருப்போம், இல்லாத ஒன்றை பேசுவதில் பாஜகவினர் கில்லாடிகள்.. ஆனால் தற்போது இருக்கின்ற ஒன்றை மறைத்து வைத்திருக்கிறார்கள், ஓட்டு திருட்டு! இந்த ஓட்டு திருட்டை பொறுத்தவரை ஒரு தொகுதியில் மட்டும், பொய்யான வாக்காளர்களை வைத்து 11,965 வாக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

முகவரி இல்லாத அல்லது பொய்யான முகவரி கொண்ட வாக்காளர்கள் மட்டும் நாற்பத்து ஒன்பதாயிரம் பேர் இருக்கிறார்கள். ஒரே முகவரியில் 80 க்கும் மேற்பட்டோர் வசிப்பது போன்ற பல உதாரணங்களை எடுத்து காட்டினார், மேலும் அந்த வீடுகளுக்கு நேரடியாக சென்று விசாரித்தபோது தாக்கப்பட்டனர் என்பதையும் ராகுல் காந்தி ஆதாரத்துடன் தெரியப்படுத்தி இருந்தார். இது போன்ற பொய்யான முகவரியில் இருந்து வந்த ஓட்டுகள் மட்டும் 10,452 வாக்குகள், வாக்காளர்களின் புகைப்படங்களை குறிப்பிட்ட அளவை விட சிறியதாகவும் பார்க்க முடியாத அளவிற்கு சுருக்கி வைத்து அதில் முறைகேடு செய்து 4,132 ஓட்டுகள் பெற்றிருக்கின்றனர்.

முதல் முறை வாக்களிக்கக் கூடிய வாக்காளர்கள் ஃபார்ம் 06 மூலம் வாக்களிக்க வேண்டும்.. அதில் ஒரே பெண் இரண்டு முறை வாக்களித்திருந்தார், இதையும் ராகுல் காந்தி அவர்கள் அந்த பெண்ணின் பெயருடன் தெளிவாக அம்பலப்படுத்தி உள்ளார், இது போன்ற 3,369 முறைகேடான வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக ஒரு தொகுதியில் மட்டுமே ஒரு லட்சம் வாக்குகளில் தேர்தல் ஆணையம் முறைகேடு செய்துள்ளது என்பதை இந்திய வரலாற்றில் முதன் முறையாக காங்கிரஸ் அம்பலப்படுத்தி காட்டியுள்ளது.

நான்கு முறை வேறு வேறு வாக்களிக்கும் பூத்திற்கு சென்று குர்கீரத் சிங் தன் என்பவர் வாக்களித்துள்ளார். 116, 124, 125, 126 ஆகிய பூத் எண்களுடன் ராகுல் காந்தி இதனை சுட்டி காட்டியுள்ளார். வெளிப்படைத்தன்மையுடன் தேர்தல் ஆணையம் வாக்காளர்கள் பட்டியலை தருவதில்லை, குறிப்பாக ஆன்லைனில் தேடும் வடிவத்தில் வாக்காளர் பட்டியல்களையும் சில தரவுகளையும் கொடுப்பதில்லை, காரணம் ஒரு பெயரை தேடினால் அது எத்தனை முறை இருக்கிறது என்பதை எளிதாக தெரிந்து கொள்ள முடியும்.

இதில் கவனிக்க வேண்டிய அம்சம் என்னவென்றால், இதை பார்த்துக் கொண்டிருக்கும் தேர்தல் ஆணையம் இதற்கு முறையான நடவடிக்கை எடுக்காமல் ராகுல் காந்தியை மிரட்டி பார்க்கிறது. கர்நாடகாவின் தலைமை தேர்தல் நிர்வாகி ராகுல் காந்திக்கு எழுதிய கடிதத்தில் “வாக்காளர் பதிவு விதி 1960 ன் கீழ் 20-வது பிரிவின் படி சத்தியப்பிரமாணம் செய்து குற்றச்சாட்டு வைக்க சொல்கிறது, மேலும் இந்த குற்றச்சாட்டுகள் பொய்யாக இருந்தால் இதுவே உங்களை தண்டிப்பதற்கு போதுமான ஆதாரங்களாக இருக்கும்” என மிரட்டும் வகையில் கடிதத்தைத் அனுப்பியுள்ளது.

இப்படித்தான் தேர்தல் ஆணையம் குற்றச்சாட்டு வைத்த அனைவரிடமும் நடந்து கொண்டதா? என்பதை நாம் கவனித்து பார்க்க வேண்டும். திருப்பதியில் 2021-ல் நடந்த இடைத் தேர்தலின் போது பாஜகவினர் 31,000 பொய்யான வாக்காளர்கள் இருப்பதாக தேர்தல் ஆணையத்திடம் குற்றச்சாட்டு வைத்தார்கள். அப்போது தேர்தல் ஆணையம் பொறுப்பில் இருந்த ஐ ஏ எஸ் அதிகாரியை பணியிடை நீக்கம் செய்தது. இதே போல் 2024-ல் ஆந்திராவில் தேர்தல் ஆணையராக இருந்த முகேஷ் குமார் மீனா, கிட்டத்தட்ட 700 நபர்கள் மீது தேர்தல் முறைகேட்டிற்காக நடவடிக்கை எடுத்திருந்தார். இப்படி வெளிப்படை தன்மையுடன் இருக்க வேண்டிய தேர்தல் ஆணையம் இன்று தோற்று போய் நிற்கிறது.

இப்படி தேர்தல் பற்றியும், தேர்தல் நடந்த முறை பற்றியும் கேள்வி எழுப்பப்பட்டால் உடனடியாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்த தேர்தல் ஆணையம், ராகுல் காந்தி வைத்த குற்றச்சாட்டுக்கு மட்டும் மிரட்டல் தொனியில் பதிலளித்துள்ளது. இதற்கு கருத்து தெரிவித்த ராகுல் காந்தி இது போல இதுவரை யாரும் ஆதாரத்துடன் குற்றச்சாட்டுகளை வைத்தது இல்லை, இன்று வரை தேர்தல் ஆணையம் இந்த குற்றச்சாட்டுகளை மறுக்கவில்லை என தெரிவித்துள்ளார். ராகுல் காந்தியின் இந்த செயல்பாடுகள் இந்திய ஜனநாயகத்தை காக்க ஒரு தலைவர் இருக்கிறார் என்பதை பறைசாற்றும் விதமாக அமைந்துள்ளது” என தெரிவித்துள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com