``முதுகில் காயம், மூளையில் இரத்த கசிவு, கழுத்தில் ஊசி.." - காவல்நிலைய தற்கொலை?.. CBCID விசாரணையில் ட்விஸ்ட் வைத்த 'பிரேத பரிசோதனை' அறிக்கை!

பிரேத பரிசோதனை' அறிக்கையில் கழுத்தின் ஆழமான திசுக்களில் ரத்தக்கசிவு இல்லை என்றும், முக்கிய எலும்புகள் சேதமடையவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
"Injuries on Back, Brain Hemorrhage, Injection Marks on Neck": Custodial Death or Suicide? Post-Mortem Report Twists CBCID Investigation
``முதுகில் காயம், மூளையில் இரத்த கசிவு, கழுத்தில் ஊசி.." - காவல்நிலைய தற்கொலை?.. CBCID விசாரணையில் ட்விஸ்ட் வைத்த 'பிரேத பரிசோதனை' அறிக்கை!
Published on: 
Updated on: 
1 min read

மதுரை செக்கானூரணி காவல்நிலைய தற்கொலை விவகாரத்தில் சிபிசிஐடி விசாரணை தீவிரமடைந்துள்ளது.

கடந்த நவம்பர் 13-ம் தேதி தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்ற ஓட்டுநர், ஏலக்காய் ஏற்றி வந்த லாரி தீப்பிடித்து எரிந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து புகார் அளிக்க செக்கானூரணி காவல்நிலையத்துக்குச் சென்றுள்ளார். அவரை இரவு முழுவதும் காவலர்கள் விசாரித்துள்ளனர். மறுநாள் அதிகாலை காவல் நிலையத்தில் உள்ள கழிவறையில் தனது முழுக்கைச் சட்டையை கம்பியில் மாட்டி அவர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பட்டது.

இந்த வழக்கை நேற்று முதல் சிபிசிஐடி காவலர்கள் விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில், இன்று வெளியாகியுள்ள பாலகிருஷ்ணனின் பிரேதப் பரிசோதனை முடிவுகள் வழக்கில் முக்கியத் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளன.

ஓட்டுநர் பாலகிருஷ்ணனின் உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்தது பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது.

கழுத்தின் முன்புறம் மற்றும் இருபுறங்களிலும் 27 செ.மீ. நீளத்தில் இறுக்கத் தழும்பு காணப்பட்டுள்ளது. கழுத்தின் ஆழமான திசுக்களில் ரத்தக்கசிவு இல்லை என்றும், முக்கிய எலும்புகள் சேதமடையவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், முதுகில் மட்டும் ஐந்து இடங்களில் ரத்தக்கட்டுக் காயங்களும், தோள்பட்டை, கை, முழங்கால் உள்ளிட்ட பகுதிகளில் சிராய்ப்புக் காயங்களும் இருந்துள்ளன. கழுத்தின் வலதுபுறத்தில் ஊசி குத்தியது போன்ற மூன்று அடையாளங்களும் பதிவாகியுள்ளன.

இரண்டு நுரையீரல்களிலும் வீக்கம் மற்றும் சிறிய ரத்தக்கசிவுகள் காணப்பட்டுள்ளன. இதயம் பெரிதாக இருந்ததுடன், மூளையிலும் வீக்கம் மற்றும் ரத்தக்கசிவு இருந்ததாகப் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட செக்கானூரணி காவல்நிலைய ஆய்வாளர் முத்து, காவலர்கள் பழனிவேல் ராஜன், கலைச்செல்வி ஆகிய மூவரிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளது. சிபிசிஐடி விசாரித்து வரும் காவல்நிலைய மரணம் தொடர்பான FIR-ல் காவலர்கள் யாரும் குற்றம்சாட்டப்பட்டவர்களாகக் குறிப்பிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

"Injuries on Back, Brain Hemorrhage, Injection Marks on Neck": Custodial Death or Suicide? Post-Mortem Report Twists CBCID Investigation
``காவிரியை தாரைவார்க்க போகிறார்களா? கோழை விஜய்.. கூட்டணிக்காக உரிமையில் சமரசம்?" -கர்நாடகா முதல்வரின் பேச்சுக்கு கொதித்தெழுந்த திமுக!

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.