``CM விஜய் ஆட்சியின் அதிகாரத் திமிரும், அடாவடித்தனமும்.." - சீறிய சீமான்.. சட்டம் ஒழுங்கு சிக்கல்கள் பற்றி சாடல்!

மீபத்தில் நடந்த குற்ற சம்பவங்களையும் காவல்துறையின் முறை தவறிய நடவடிக்கைகளையும் சுட்டிக்காட்டிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இதெல்லாம் முதல்வர் விஜய்க்கு தெரியப்போவதில்லை என கடுமையாக சாடியுள்ளார்.
Seeman Condemns Law and Order Failures in Vijay's Tamil Nadu Government
``CM விஜய் ஆட்சியின் அதிகாரத் திமிரும், அடாவடித்தனமும்.." - சீறிய சீமான்.. சட்டம் ஒழுங்கு சிக்கல்கள் பற்றி சாடல்!
Published on: 
Updated on: 
2 min read

தமிழகத்தில் தீபாவளி கொண்டாட்டத்துக்கு இடையே ஒரே நாளில் 11 கொலைகள் நடைபெற்றது. அதில் ஒரு காவலர், சிறார்கள் மற்றும் ஒரு இளம் பெண்ணும் அடக்கம் என்பது நாட்டையே உலுக்கியுள்ளது.

இத்துடன் தமிழக வெற்றிக் கழகம் துறையூர் MLA-வும் சட்டமன்ற துணை சபாநாயகருமான ரவி ரங்கர், தொகுதியில் உள்ள குறைகளை எடுத்துரைக்க வந்தவரை அடித்த வீடியோவும் அதை மறைக்க எடுத்த முயற்சிகளும் அம்பலாமாகியிருக்கிறது.

இத்துடன் சமீபத்தில் நடந்த குற்ற சம்பவங்களையும் காவல்துறையின் முறை தவறிய நடவடிக்கைகளையும் சுட்டிக்காட்டிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இதெல்லாம் முதல்வர் விஜய்க்கு தெரியப்போவதில்லை என கடுமையாக சாடியுள்ளார்.

அவரது அறிக்கையில், "ஒரே நாளில் 11 படுகொலைகள்! குறைகளைத் தெரிவிக்க வந்தவரைத் தாக்கிய துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ரவிசங்கர்! சட்டம் ஒழுங்குக்கும், பொது அமைதிக்கும் விடுமுறைவிட்டு விட்டாரா விஜய்?

தீபாவளி பண்டிகைக் கொண்டாடப்பட்ட நேற்றைய தினம் மட்டும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் 11 பேர் கொல்லப்பட்டதாக வெளியாகியுள்ள செய்தி பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.

ஒரு பண்டிகை நாளைக்கூட பாதுகாப்பாகக் கொண்டாட முடியாத அளவுக்கு தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு மிக மோசமாகச் சீரழிந்திருந்திருப்பது கையாலாகா தவெக ஆட்சியாளர்களின் மோசமான ஆட்சிக்கான சாட்சியாகும். தேனி, சமதர்மபுரத்தில் பொதுச்சாலையை மறித்துப் பட்டாசு வெடித்தவர்களைத் தட்டிக்கேட்டதற்காகக் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில்குமார் கடுமையாகத் தாக்கப்பட்டு உயிரிழந்திருக்கிறார். சாலையில் செல்லும் மக்களுக்கு இடையூறு ஏற்படுவதைத் தட்டிக்கேட்ட ஒரு காவல்துறை அதிகாரிக்கே இந்நிலையென்றால், பொதுமக்கள் யாரை நம்பி வீதிக்கு வருவார்கள்? மக்களைக் காக்கும் காவல்துறையினருக்கே பாதுகாப்பில்லை எனுமளவுக்குத் தமிழ்நாட்டுச்சூழல் தள்ளப்பட்டிருப்பது பொதுஅமைதி முற்றிலும் குலைந்ததற்கான அறிகுறியாகும்.

வார இறுதியில் தலைமைச்செயலகத்துக்கு விடுமுறை விடுவதுபோல, சட்டம் ஒழுங்குக்கும், பொது அமைதிக்கும் விடுமுறை விட்டுவிட்டாரா முதலமைச்சர் விஜய்? இத்தனைக் கொலைகளுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்? ஒரு பண்டிகை நாளன்றுகூட மக்கள் பயத்தோடும், பதற்றத்தோடும்தான் இருக்க வேண்டுமென்றால், நடப்பதற்குப் பெயர் ஆட்சியா? குற்றங்களை நிகழவிட்டுவிட்டு, குற்றவாளிகளைப் பிடித்துச் சிறைலடைப்பது காவல்துறையின் வேலை இல்லை; குற்றங்களே நிகழாதவணக்கம் அமைதியான, பாதுகாப்பான சமூகத்தைப் படைப்பதே காவல்துறையின் முதன்மை நோக்கமாக இருக்க முடியும். சிறைவாசிகள் சர்வசாதாரணமாகச் சிறையிலிருந்து தப்பித்து ஓடுவது ஒருபுறமென்றால், போதைப்பொருட்களின் மிதமிஞ்சியப் புழக்கம் மறுபுறம்! தவெகவின் நிர்வாகிகளே போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஒன்றிய அரசின் படையாலும், கேரள அரசின் காவல்துறையாலும் கைதுசெய்யப்படுகின்றனர். அதனைக் கண்டுகொள்ளாத காவல்துறை, மதுக்கடைக்கு எதிராகப் போராடியவரின் கடையில் போதைப்பொருளை வைத்து, பொய் வழக்குத் தொடுக்க முனைகிறதென்றால், இந்த அவலத்தை என்னவென்று கூறுவது?

தொகுதிசார்ந்த குறையை நேரில்கூறச் சென்ற ஒருவரை துறையூர் சட்டமன்ற உறுப்பினரும், துணை சபாநாயகருமான ரவிசங்கர் தாக்கும் காணொளிக்காட்சிகள் தவெக ஆட்சியின் அதிகாரத் திமிருக்கும், அடாவடித்தனத்துக்குமான சான்றாகும். தேர்தல் வழக்குக்காக என்னுடைய தங்கை கார்த்திகா, தம்பி இசை மதிவாணன் உள்ளிட்டவர்களைத் தேடிப்பிடித்துக் கைதுசெய்து சிறைப்படுத்திய தவெக அரசு, இப்போது என்ன செய்யப் போகிறது? பாதிக்கப்பட்ட நபரை மிரட்டி அச்சுறுத்தி, ஒன்றுமே நடக்கவில்லை எனப் பக்கத்தில் அமர வைத்துப் பேச வைப்பதெல்லாம் கேவலம் இல்லையா?

தவறுகளுக்குப் பொறுப்பேற்பு, பிழைகளை ஏற்றுக்கொண்டு திருத்திக் கொள்ளுதல், குற்றமிழைத்தவர் எவராயினும் நடவடிக்கை எடுத்தல் என்பதெல்லாம் தலைமைப்பண்புக்கான அடிப்படைக் குணநலன்கள். இதுவெல்லாம் என்னவென்று முதல்வர் விஜய்க்கு ஒருபோதும் தெரியப் போவதில்லை. எல்லாவற்றிற்கும் அவரிடம் இருக்கும் ஒற்றைத்தீர்வு, Road Show எனும் பெயரில் நடக்கும் கேலிக்கூத்து, மக்களைத் திசைதிருப்ப நடக்கும் மலினமான நாடகங்கள், போலியானக் கட்டுக்கதைகள், பொய்யானக் கருத்துருவாக்கங்கள்!

இதுவெல்லாம் பிரச்சினைகளிலிருந்து மக்களின் கவனத்தை மடைமாற்றுமே ஒழிய, ஒருபோதும் பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற்றுத் தராது. இனியாவது உணர்வாரா முதல்வர் விஜய்?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

Seeman Condemns Law and Order Failures in Vijay's Tamil Nadu Government
``காக்கிச் சட்டைக்கே பாதுகாப்பில்லை", "CM விஜய் வாய் திறக்கப்போவதில்லை..." ஒரே நாளில் 11 கொலைகள்.. எதிர்க்கட்சிகள் கண்டனம்
Seeman Condemns Law and Order Failures in Vijay's Tamil Nadu Government
``Reddy Gang உடன் சேர்ந்து நள்ளிரவில் முடிவு.. " - CM விஜய் 'தமிழ்நாட்டுக்கு விரோதமாக' உத்தரவிட்டதாக அப்பாவு குற்றச்சாட்டு!
Seeman Condemns Law and Order Failures in Vijay's Tamil Nadu Government
``கோபம் அவர் மீதா?.. முதலமைச்சர் விஜய் மீதா?" சாமானியரை தாக்கிய தவெக MLA.. டிடிவி தினகரன் கடும் விமர்சனம்!

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.