முதல்வர் விஜய்யை பார்க்க.. கம்பெனிக்கு லீவ் போட்டு வந்து.. வெயிலில் பல மணி நேரமாக காத்திருக்கும் ரசிகர்!

அதில் கல்லூரி மாணவி ஒருவர், “நான் காலேஜ் போகல இன்னைக்கு, லீவ் போட்டுட்டு விஜயை பார்க்க வந்துட்ட.."
CM vijay visit dharapuram
Published on: 
Updated on: 
2 min read

தாராபுரம் இடைத்தேர்தலுக்கு இன்னும் 5 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் பிரச்சார களம் தீவிரமடைந்துள்ளது. அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் என தொடர்ந்து நாள்தோறும் தொகுதி மக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழக வெற்றிக் கழக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான விஜய், தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தடைந்தார். அங்கிருந்து சாலை மார்க்கமாக தாராபுரம்–உடுமலை சாலையில் உள்ள மாருதி நகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பிரச்சார திடலுக்கு வந்துகொண்டிருக்கிறார். வழி எங்கும் மக்கள் இருபுறமும் காத்திருந்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மாலை 3 மணியளவில் பரப்புரை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று அதிகாலை முதலே விஜய்யை காண மக்கள் சாரை சாரையாக பிரச்சார திடலுக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர். வெயில் அதிகரிக்க அதிகரிக்க பரப்புரை திடல் சவால் மிகுந்ததாக மாறி வருகிறது. ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட 5000 பேர் என்ற அளவை விட அதிகமான கூட்டம் வந்துள்ளதால் காவல்துறையினரால் கட்டுப்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளது.

விஜயை காண காலை முதல் காத்திருந்த பொதுமக்களை சந்தித்த மாலைமுரசு செய்தியர்கள் அவர்களிடம் காத்திருப்பதின் குறித்து கேட்டறிந்தனர். அதில் கல்லூரி மாணவி ஒருவர், “நான் காலேஜ் போகல இன்னைக்கு, லீவ் போட்டுட்டு விஜயை பார்க்க வந்துட்ட. அவரை முதல் முறையாக பார்ப்பதற்கு ரொம்ப ஆர்வமா வெயிட் பண்ணிட்டு இருக்க” என்று உற்சாகமாக தெரிவித்தார். மற்றொரு இளம்பெண், “ விஜயை பார்ப்பதற்காக நைட் தூங்கவே இல்ல, காலையில சீக்கிரமே வந்து காத்திருக்கிறோம் என்று தெரிவித்தார்.

cm vijay visit dharapuram

வழிநெடுக முதலமைச்சர் விஜயை திரண்ட பொதுமக்களில் வேறு மாநிலத்தை சேர்ந்தவர்களும் காத்திருந்தனர். வேலைக்காக திருப்பூர் வந்துள்ள வேற்று மாநிலத்தவர் ஒருவர் அங்குள்ள கம்பெனில ஒன்றில் வேலை பார்ப்பதாகவும், “விஜயை பார்பதாக லீவ் போட்டுட்டு வந்ததாகவும்” தெரிவித்தார். மேலும் த்ரிஷிகா மான்வி என்ற முதுகெலும்பு தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு சிகிச்சை நன்கொடை வழங்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார். இந்த விஷயம் CM விஜக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் என்றும் இந்தியர்கள் எல்லோரும் அந்த குழந்தையின் சிகிச்சைக்கு பணம் கொடுத்து உதவ வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.  

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com