

தமிழ்நாட்டில் SIR வாக்காளர் பட்டியல் தீவிர சீர்திருத்த நடவடிக்கையில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள், ராகுல் காந்தியின் போராட்டம், தவெக அரசியல் வருகை மற்றும் நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்த விவாதங்கள் எனப் பல்வேறு அரசியல் கேள்விகள் தற்போது பேசுபொருளாகியுள்ளன. இந்நிலையில், SIR விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகள் எந்த அளவுக்கு உண்மை, தவெக ஆட்சிக்கு வந்ததன் பின்னணியில் SIR-ன் தாக்கம் உள்ளதா, நடிகர்களின் அரசியல் வருகை தமிழக அரசியலில் என்ன மாதிரியான மாற்றங்களை ஏற்படுத்தும் என்பது குறித்து மூத்த பத்திரிகையாளர் துக்ளக் ரமேஷ், மாலைமுரசு தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.
நெறியாளர்; தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக கோரி மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி போராட்டத்தில் ஈடுபட்டார், பின் கைதும் செய்யப்பட்டார். கடந்த பல நாட்களாக மாணவர்களும் பல இயக்கங்களும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழ்நாட்டிலும் SIR முறைகேடு நடந்து இருக்கு இதன் வெளிப்பாடுதான் தவெக ஆட்சிக்கு வந்திருக்கிறது போன்ற விமர்சனங்களும் வருகிறது. இதை எப்படி சார் பார்க்கலாம்?
வாக்காளர் பட்டியல் தீவிர சீர்திருத்த நடவடிக்கை என்பது ஏதோ யாருக்கும் தெரியாமல் ஒரே இரவில் அல்லது சில நாட்களுக்குள் அவசரகதியில் நடத்தி முடிக்கப்பட்டது அல்ல. வாக்காளர் பட்டியல் ஒவ்வொரு பகுதியிலும் வெளியிடப்பட்டது. காங்கிரஸ் கட்சி வரிசையாக பல மாநிலங்களில் தோல்வியை தழுவிய காரணத்தால், முதலில் EVM மிஷின் மீது பழி கூறியது. எந்த பட்டணை அழுத்தினாலும் தாமரைக்கு ஓட்டு விழும் என்று சொல்வதெல்லாம் இதெல்லாம் எவ்வளவு பிதற்றல் வாதம். அப்படி என்றால் நீங்கள் எப்படி ஆந்திராவில் ஜெயித்தீர்கள் ஹைதராபாத்ல எப்படி ஜெயித்தார்கள். ரேவந்த் ரெட்டி எப்படி முதலமைச்சர் ஆனார்? அங்க மட்டும் பிஜேபி காங்கிரஸ் ஜெயிக்கட்டும்னு விட்டாங்களா? எனவே இதெல்லாம் பிதற்றலான வாதம்.
முழு நேர்காணலையும் காண இங்கே கிளிக் செய்யவும்
பாராளுமன்றம் 543 தொகுதியிலும் என்ன ரிசல்ட் வர வேண்டும் என செட் பண்ணுவாங்களா? பாரதிய ஜனதா உள்பட சில கட்சிகள்ராகுல் காந்தியை பப்பு என்று விமர்சிக்கின்றனர். பப்புன்னா அரசியலில் ஒரு குழந்தை மாதிரி. அவர் நடந்து கொள்கிற முறை அப்படித்தான் இருக்கிறது. டெல்லியில் நடந்த போராட்டம் வெற்றிகரமான போராட்டமே இல்லை. மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியது தான் மிச்சம்.
நெறியாளர்; காங்கிரசுடன் கூட்டணியில் உள்ள தவெக SIR-யை எதிர்ப்பதாகவும், ராகுல் காந்தி அவர்களை கைது செய்வதையும் எதிர்க்கிறோம் என்றும் சொல்கிறார்கள். ஆனாலும் தவெக பாஜாகாவை நேரடியாக விமர்சனம் செய்வதில்லை எதிர்ப்பதில்லை என்றும் சொல்லப்படுகிறதே.. உண்மையா?
திருமாவளவன் ஒரு கேள்வி கேட்டிருக்காரு. SIR ஆல் தான் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இருக்கு என்று. அவருக்கு திமுக தான் வரவேண்டும் என்ற விருப்பம் இன்னும் இருக்கிறது என்பது போல தான் இருக்கிறது. தவெக வந்ததை அவர் விரும்பவில்லை போல இருக்கிறது. பல இடங்களில் அது போல பேசுவதையும் பார்க்க முடிகிறது. முன்னாடி கரூர் சம்பவத்தில் விஜயை கைது பண்ணிருக்க வேண்டும் என்று பேசினார். அப்படின்னா என்ன அர்த்தம்? விஜய் ஆட்சிக்கு வந்தது அவருக்கு பிடிக்கலையா? எஸ்ஐஆர் எதிர்ப்பை பொறுத்தவரை அரசியல் செய்யப்படுகிறது. அதை வைத்து ஒரு அரசியல் நடக்கிறது என்றுதான் நான் பார்க்கிறேன்.
நெறியாளர்; “எஸ்ஐஆர் பொறுத்தவரைக்கும் எங்கெங்கெல்லாம் அதிகமான இடங்களில் வாக்குகள் நீக்கப்பட்டிருக்கோ.. அந்த இடங்களில் தவெக வெற்றி பெற்று இருக்குனு சொல்றாங்களே” அது உண்மையா?
நான் இந்த குற்றச்சாட்டை ஏற்க மாட்டேன். அதிமுக பாஜகவுடன் கூட்டணியில் இருக்கிறது. SIR-ல் தவறு செய்திருந்தால் இங்க யாரு ஜெயிச்சிருக்கணும் பாஜக இருந்த அணிதானே ஜெயிச்சிருக்கணும். அந்த அணியும் ஜெயிக்கவில்லை. திமுக , அதிமுக கூட்டணி ஜெயிக்காம.. வேட்பாளர் யாருன்னே தெரியாத கட்சி ஜெயிக்குது.
நெறியாளர்; தமிழ்நாட்டில், திரையுலகில் இருந்து அடுத்தடுத்து அரசியலுக்கு வரக்கூடியவர்களின் எண்ணிக்கை அதிகமாயிட்டே இருக்கு. இனி வரக்கூடிய காலகட்டங்களில் தமிழ்நாட்டில் திராவிட கட்சிகள் VS தமிழ்நாட்டு நடிகர்கள் அப்படின்னு செல்வதற்கான வாய்ப்புகள் இருக்கா?
விஜய் வெறும் திரைப்பிரபலத்தை மட்டுமே வைத்துக்கொண்டு, முதலமைச்சர் ஆனர். பிறகு நான் ஏன் வர முடியாது என்ற எண்ணம் நீங்கள் குறிப்பிட்ட எல்லாருக்கும் வந்திருக்கிறது. இதற்கு அரசியல் எல்லாம் பெருசா தேவையில்லை, தத்துவார்த்தமான அரசியல் தேவையில்லை, கொள்கை எல்லாம் தேவையில்லை, ஒரு கூட்டம் மட்டும் இருக்கணும் ஆட்டு மந்தை மாதிரி. தலைவா தலைவான்னு கத்திட்டு இருக்கணும், விசில் அடிக்கணும், டான்ஸ் ஆடணும் குறிப்பாக இளம் பெண்கள்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.