

இன்று திருச்சியில் தவெக கட்சியின் மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் நடைபெற்றது. அதில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும், தமிழக முதல்வருமான ஜோசேப் விஜய் பங்கேற்று தனக்கு வாக்களித்த திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்தார். உடன் இந்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் N. ஆனந்த் ஆகியோர் கலந்துகொண்டனர். 2026 சட்டமன்ற தேர்தலில் திருச்சி கிழக்கு மற்றும் சென்னை பெரம்பூர் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டார் விஜய். இரு தொகுதிகளிலும் மிகப்பெரிய வெற்றி பெற்றார், பின்பு திருச்சி கிழக்கு தொகுதியில் ராஜினாமா செய்வதாக அறிவித்தார். ஆனலும் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்க இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டதாக தெரிவித்தனர்.
தொடக்கத்தில் மக்களுக்கு நன்றி தெரிவித்த அவர், ஒரு கட்டத்திற்கு மேல் திமுகவை கடுமையாக விமர்சித்தார். மேலும் தவெக கட்சியினரை தற்குறிகள் என மற்ற கட்சியினர் குறிப்பிடுவதை எதிர்த்து பொங்கி எழுந்தார். “மக்கள் அவங்களுக்கு ஓட்டு போட்டால் நல்லவங்கலாம், ஆனா எங்களுக்கு ஓட்டு போட்டால் தற்குறிகளாம்” என்றும் “ இதே மக்கள் தான் இத்தனை வருடங்களாக உங்களுக்கு வாக்களித்தார்கள்” என்று திமுகவை நேரடியாக சாட்டினார் முதல்வர் விஜய். அப்போது கோவத்தின் உச்சிக்கு என்ற விஜய், “தற்குறியாம் தற்குறி, நல்ல வருது வேணான்னு பாக்குற” என்று கடுமையாக பேசினார். தற்குறி என நினைத்தவர்கள் தான் இன்று உங்கள் திமுக தலைவர்கள் வாழ்க்கையை கேள்வி குறியாக்கியுள்ளாரர்கள் என்று பேசினார்.
தொடர்ந்து வாக்குறுதிகளை குறித்து பேசிய அவர், கடந்த ஆட்சியில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி தான் இந்த சிக்கல்களுக்கு காரணம் தெரிவித்தார். கடந்த அரசை நோக்கி, “நீங்க தான் நிதி சார்ந்த எல்லா gate-யையும் லாக் செஞ்சுட்டு போய்ட்டீங்களே” என்று குற்றம் சாட்டினார். மேலும் அதை செய்ய வேண்டாமா? ஒழுங்கு படுத்த வேண்டாமா? என்று கேள்வி எழுப்பினர். அவங்க தான் ஆட்சியிலையே இல்லையே அப்புறம் என் அவர்கள் குறை சொல்றீங்க அப்படினு கேட்பாங்க, என்று ஆரம்பித்த விஜய் “அதன் வேரிலையே வெந்நீரை ஊற்றிவிட்டு சென்றவர்களை வெளிச்சம் போட்டு காட்ட வேண்டாமா? அதற்காக தான் அதை பற்றி பேசுகிறேன் என்று கூறினார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.