

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகிய நிலையில், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) பெரும்பான்மை தொகுதிகளை கைப்பற்றி இருந்தாலும்,பின்னர் கூட்டணி கட்சிகளோடு ஆட்சி அமைத்தது. 108 என்ற பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்ற தவெக, பின்னர் சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பிலும் 144 உறுப்பினர்களின் ஆதரவை பெற்று தனது பலத்தை நிரூபித்தது.
இதனைத் தொடர்ந்து, புதிய அமைச்சரவை தொடர்பான இலாகா ஒதுக்கீட்டு பட்டியலை ஆளுநர் மாளிகை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள தவெக தலைவர் ஜோசப் விஜய், காவல்துறை, பொதுநிர்வாகம் மற்றும் உள்துறை உள்ளிட்ட முக்கிய துறைகளை கண்காணிப்பார். திரையுலகிலிருந்து அரசியலுக்கு வந்த விஜய், முதல் முறையாகவே ஆட்சியை அமைத்துள்ள நிலையில், அவரது அமைச்சரவை அமைப்பு தமிழக அரசியலில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக அனுபவம் மற்றும் புதிய தலைமுறையை இணைக்கும் வகையில் அமைச்சரவை உருவாக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சராக கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை தி.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான இவர், கட்சியின் தொடக்க காலத்திலிருந்தே விஜய்க்கு நெருக்கமானவராக கருதப்படுகிறார். அதேபோல் பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக ஆதவ் அர்ஜூனா நியமிக்கப்பட்டுள்ளார். இளைஞர் வாக்காளர்களிடையே பிரபலமான முகமாக பார்க்கப்படும் இவர், விளையாட்டு மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டின் சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக அருண்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். திருச்செங்கோடு தொகுதி சட்டமன்ற உறுப்பினரான இவர், மருத்துவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், தமிழக நிதித்துறை அமைச்சராக கே.ஏ. செங்கோட்டையன் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் அதிமுக ஆட்சியில் கல்வித்துறை அமைச்சராக இருந்த அனுபவமிக்க அரசியல்வாதியான இவர், தற்போதைய தவெக ஆட்சியில் முக்கிய பொறுப்பைப் பெற்றிருப்பது அரசியல் ரீதியாக கவனம் பெற்றுள்ளது.
இதன் மூலம், புதிய அரசின் நிர்வாக திசை, அரசியல் அணுகுமுறை மற்றும் தமிழக வளர்ச்சிக்கான திட்டங்கள் குறித்து மக்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. அதன்படி அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புகள் வருமாறு:-
ச. ஜோசப் விஜய் - காவல்துறை மற்றும் பொது நிர்வாகம்
என். ஆனந்த் - ஊரக வளர்ச்சித்துறை
ஆதவ் அர்ஜுனா - பொதுப்பணி மற்றும் விளையாட்டு துறை
அருண்ராஜ் - மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை
கே. ஏ. செங்கோட்டையன் - நிதித்துறை
வெங்கட்ராமனான் - உணவு பாதுகாப்புத்துறை
C.T.R. நிர்மல் குமார் - மின்சாரம் மற்றும் சட்டத்துறை
ராஜ் மோகன் - பள்ளிக் கல்வித்துறை, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை
டி. கே. பிரபு - கனிமவளத்துறை அமைச்சர்
ச. கீர்த்தனா - தொழித்துறை அமைச்சர்
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.