``சென்னைக்கு என்ன ஆச்சு?" ஃபீடிங் பாட்டிலில் 'செர்லாக்' குடிக்க முந்தியடிக்கும் கூட்டம்.. இவ்வளவு விலை கொடுத்து வாங்குறாங்களா?

கடை வைரலாக வேண்டும் என்பதற்காக வித்தியாசமான உணவுகளை பரிசோதனை முயற்சியாக அறிமுகப்படுத்துவது நல்ல நடைமுறை என்றாலும் இந்த முறை அவர்களின் புதுமை கொஞ்சம் எல்லை மீறியதாக விமர்சிக்கப்படுகிறது.
``சென்னைக்கு என்ன ஆச்சு?" ஃபீடிங் பாட்டிலில் 'செர்லாக்' குடிக்க முந்தியடிக்கும் கூட்டம்.. இவ்வளவு விலைகொடுத்து வாங்குறாங்களா?
``சென்னைக்கு என்ன ஆச்சு?" ஃபீடிங் பாட்டிலில் 'செர்லாக்' குடிக்க முந்தியடிக்கும் கூட்டம்.. இவ்வளவு விலைகொடுத்து வாங்குறாங்களா?
Published on: 
Updated on: 
1 min read

சமூக வலைத்தளங்கள் மூலம் வைரலாகும் உணவுகளை முயற்சித்துப் பார்க்கும் ஆர்வம் இயல்பானதுதான். அதற்காகக் குழந்தைகள் குடிக்கும் ஃபீடிங் பாட்டிலில் குடிப்பது வரை செல்லலாமா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தேனாம்பேட்டை அருகில் உள்ள சியாக்கோ என்ற கஃபேவில்தான் இந்தக் கூத்து நிகழ்ந்து வருகிறது. மாலை நேரமானாலே பச்சிளம் குழந்தைகள் பருகக்கூடிய செர்லாக்கை ஃபீடிங் பாட்டிலில் குடிப்பதற்காக சென்னைவாசிகள் அங்கு கூடியிருக்கின்றனர்.

வளர்ந்தவர்கள் கும்பலாக வாயில் ஃபீடிங் பாட்டிலை வைத்துச் சப்பிக் குடிக்கும் காட்சி விசித்திரமாக இருந்தாலும், அந்தக் கஃபேவில் இது சாதாரணமாக நடந்து வருகிறது. சியாக்கோ இதுபோன்ற வித்தியாசமான உணவுப் புதுமைகளுக்காக அறியப்படுகிறது. பிரியாணி, ரசம் மற்றும் மாங்காய் ஊறுகாய் சுவையுடைய ஐஸ்கிரீம்களை அறிமுகப்படுத்தியபோதே இந்தக் கஃபே கவனம் பெற்றது.

கடை வைரலாக வேண்டும் என்பதற்காக வித்தியாசமான உணவுகளைப் பரிசோதனை முயற்சியாக அறிமுகப்படுத்துவது நல்ல நடைமுறை என்றாலும், இந்த முறை அவர்களின் புதுமை கொஞ்சம் எல்லை மீறியதாக விமர்சிக்கப்படுகிறது.

ஹேசல்நட் மற்றும் பாதாம் விழுது, ஆவியாக்கப்பட்ட பால் (Evaporated Milk), செர்லாக், முழு கொழுப்புள்ள பால் மற்றும் வெண்ணிலா பீன் ஆகியவற்றைக் கொண்டு இந்தப் பானம் தயாரிக்கப்படுகிறது. மென்மையாகவும் கிரீமியாகவும் மாறுவதற்காக இது ஆறு மணி நேரத்திற்கும் மேலாகப் பாஸ்டரைசேஷன் (Pasteurisation) என்ற செயல்முறைக்கு உட்படுத்தப்படுகிறது.

இதன் சுவை, பேசப்படும் அளவுக்குச் சிறப்பானதாக இல்லை எனப் பல இன்ஃப்ளூயன்சர்கள் தெரிவிக்கின்றனர். கட்டியான பாலில் பிஸ்கட் போட்டுச் சாப்பிடும் சுவையைத் தருவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

இதைக் குடிக்க வரும் அனைவருமே தங்களைப் பல கோணங்களில் வீடியோ எடுத்துக்கொள்கின்றனர்.

``சென்னைக்கு என்ன ஆச்சு?" ஃபீடிங் பாட்டிலில் 'செர்லாக்' குடிக்க முந்தியடிக்கும் கூட்டம்.. இவ்வளவு விலைகொடுத்து வாங்குறாங்களா?
முதலமைச்சர் உடன் எடுத்த புகைப்படத்தை நீக்கிய மெட்டா.. ``இது பாசிசமா, பாயாசமா?" - TOI அருண் ராம்-க்கு நடந்தது என்ன?

ஃபீடிங் பாட்டிலில் செர்லாக் பானத்தை விற்பனைக்குக் கொண்டுவரும் யோசனை குழந்தைகள் தினத்தையொட்டி அறிமுகப்படுத்தப்பட்டதாம். இது மக்களுக்குத் தங்கள் குழந்தைப் பருவத்தை நினைவூட்டும் ஒன்றாகவும் இருக்கிறது.

ஆனாலும், 350 ரூபாய் கொடுத்து இந்தப் பானத்தை வாங்கிக் குடிப்பதன் நோக்கம் குழந்தைப் பருவ நினைவுகள், செர்லாக்கின் சுவை ஆகியவற்றைத் தாண்டி, சமூக வலைத்தளங்களில் இதைப் பதிவிடுவதாகவும் இருக்கிறது. சிலருக்கு இப்படி ஒரு வினோத ஆசையும் இருக்கக்கூடும்.

உங்களுக்கும் அப்படியான ஆசை இருந்தால்... சியாக்கோ, 532, அண்ணா சாலை, திரு.வி.க. ஹவுசிங் போர்டு, தேனாம்பேட்டை. இதுதான் முகவரி!

``சென்னைக்கு என்ன ஆச்சு?" ஃபீடிங் பாட்டிலில் 'செர்லாக்' குடிக்க முந்தியடிக்கும் கூட்டம்.. இவ்வளவு விலைகொடுத்து வாங்குறாங்களா?
சென்னையை ‘அசிங்கமான சகோதரி’ என அழைக்கும் அமெரிக்கா! தமிழக ஏற்றுமதிக்கு என்ன ஆபத்து?

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.