மகாராஷ்டிரா அமைச்சரவை விரிவாக்கம்!!!

மகாராஷ்டிரா அமைச்சரவை விரிவாக்கம்!!!

மகாராஷ்டிர மாநில மழைக்கால கூட்டத்தொடர் ஆகஸ்ட் 10ம் தேதி தொடங்கவுள்ள நிலையில் நாளை காலை 11 மணிக்கு அமைச்சரவை விரிவாக்கம் நடைபெறவுள்ளது.

உத்தவ்-ஷிண்டே மோதல்:

மகராஷ்ட்ராவில் சிவசேனா – தேசியவாத காங்கிரஸ் – காங்கிரஸ் தலைமையிலான மெகா கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக அக்கட்சியின் மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே கலகத்தில் ஈடுபட்டார்.  இதனையடுத்து நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பிலும் வெற்றி பெற்று மகாராஷ்டிரா மாநிலத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றார் ஷிண்டே.

தலைநகர் பயணம்:

ஷிண்டே முதலமைச்சராக பதவியேற்றதும் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், முன்னாள் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரை  துணை முதலமைச்சர் ஃபட்னாவிஸ் உடன் சந்தித்தார். அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக சந்தித்து பேசியதாக அப்போது அவர்கள் இருவரும் கூறியிருந்தனர்.

நிதி ஆயோக்:

தற்போது மகாராஷ்டிரா கேபினட் அமைச்சரவை இரண்டு கேபினட் அமைச்சர்களை மட்டுமே கொண்டு செயல்பட்டு வருகிறது.  ஏக்நாத் ஷிண்டேவும் தேவேந்திர பட்னாவிஸுமே அந்த இரண்டு கேபினட் அமைச்சர்கள்.   22 அமைச்சர்களுடன் இவர்கள் இருவரும் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

அமைச்சரவை விரிவாக்கம் தாமதம்:

விரிவாக்க தாமதத்திற்கு ஏக்நாத் ஷிண்டே குழுவின் கோரிக்கைகளிம் ஒரு காரணம் என்று பாஜகவின் உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்து வந்தன. அமைச்சர்களாக இருந்த சிவசேனா எம்.எல்.ஏ.க்களுக்கு கேபினட் அமைச்சர் பதவி நிலை முடிவாகிவிட்ட நிலையில், இன்னும் சிலர் சில பதவிகளை எதிர்பார்த்த்தே தாமதத்திற்கான காரணம் என பாஜக தரப்பில் கூறப்பட்டது.

அமைச்சரவை விரிவாக்கம்:

ஏக்நாத் ஷிண்டே அணிக்கு 14 முதல் 15 கேபினட் அமைச்சரவை பதவிகள் கிடைக்கும் என எதிர்பார்க்கபடுவதாக கூறப்பட்டுள்ளது.  தேவேந்திர பட்னாவிஸ்ஸிற்கு உள்துறை அமைச்சகம் ஒதுக்கப்படும் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

நாளை காலை 11 மணிக்கு ஏக்நாத் ஷிண்டே அணிக்கு எத்தனை பதவிகள் கிடைக்கும் எனவும் யாரெல்லாம் அமைச்சர்களாக பதவி ஏற்பார்கள் என்ற கேள்விகளுக்கு விடை கிடைக்கும்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com