நீதிமன்றத்தில் சரணடைய வந்த குற்றவாளி தப்பி ஓட்டம்...

நெல்லை அருகே நீதிமன்றத்தில் சரணடைய வந்த குற்றவாளி தப்பிச் சென்ற சம்பவம் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.
நீதிமன்றத்தில் சரணடைய வந்த குற்றவாளி தப்பி ஓட்டம்...
Published on
Updated on
1 min read

நெல்லை | மகாராஜா நகரை சேர்ந்தவர் வெள்ளை சுந்தர் இவர் மீது சென்னை உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது மேலும் தென் தமிழகத்தைச் சேர்ந்த ரவுடி ராக்கெட் ராஜாவின் கூட்டாளியாக வெள்ளை சுந்தர் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதுபோன்ற சூழ்நிலையில் வெள்ளை சந்தர் தனது உறவினரான அஜய் கோபி என்ற இளைஞருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளித்த வீடியோ ஒன்று சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது போலீஸ் விசாரணையில் அந்த வீடியோ பல ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்டது என்பது தெரியவந்தது.

இருப்பினும் பழைய வீடியோவை தற்போது சமூக வலைதளங்களில் பரவ விட்டு பொதுமக்கள் மத்தியில் ஆயுத கலாச்சாரத்தை ததூண்டியதாக நெல்லை பாளையங்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து அஜய் கோபியை கைது செய்தனர் மேலும் இந்த வழக்கில் தேடப்பட்ட வெள்ளை சுந்தர் தலைமறைவானதாக கூறப்பட்டது.

அதே சமயம் கடந்த 2 4ஆம் தேதி வெள்ளை சுந்தர் நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைய வந்தார் அப்போது திடீரென வெள்ளை சுந்தர் கடும் போலீஸ் பாதுகாப்பை மீறி நீதிமன்றத்தில் இருந்து தப்பி ஓடிய சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் அதிர்ச்சி ஏற்படுத்தியது மேலும் நூற்றுக்கணக்கான போலீசார் நடமாடும் நீதிமன்ற வளாகத்தில் முக்கிய வழக்கின் குற்றவாளி சாதாரணமாக தப்பி சென்ற சம்பவம் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் குற்றவாளி வெள்ளை சுந்தரை தப்ப விட்டதாக கூறி பாளையங்கோட்டை காவல் ஆய்வாளர் வாசிவத்தை கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் செய்து மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் அதிரடி உத்தரவிட்டுள்ளார் மேலும் இந்த இடமாற்றம் பின்னணியில் ஆய்வாளர் வாசிவம் குற்றவாளி வெள்ளை சுந்தரிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டு அவர் தப்பி செல்ல உதவியதாகவும் கூறப்படுகிறது.

குற்றவாளியை கைது செய்ய வேண்டிய காவல் ஆய்வாளரே குற்றவாளி நீதிமன்ற வளாகத்தில் வைத்து தப்பி செல்ல உதவியதாக கூறப்படும் சம்பவம் நெல்லை மாநகர காவல் துறை வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com