2022ம் ஆண்டின் ஐசிசி டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி குறித்த அதிகாரப்பூர்வ பட்டியலை ‘பிசிசிஐ’ வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் எதிர்பாராத சிலர் இருந்தாலும், எதிர்பார்த்த சிலர் இல்லாத நிலையில், சர்ச்சை கிளம்பியுள்ளது.
இந்திய அணி அறிவிப்பு!!!
இன்று, அனைத்து இந்திய மூத்த தேர்வு குழு கூடியது. அதில், ஆஸ்திரேலியாவில் நடக்கவிருக்கும் ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை மற்றும் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 ஐ தொடருக்கான இந்திய அணிகளைத் தேர்ந்தெடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, போட்டியில் விளையாட இருக்கும் முக்கிய வீரர்களும், ஸ்டாண்ட் பை ப்ளேயர்களான மற்ற வீரர்களும் அறிவித்த நிலையில், பல வகையான கலவையான கருத்துகள் கிளம்பியுள்ளன.
அதற்கு முன், ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி யார் என்று பார்க்கலாமா?
ரோஹித் சர்மா (கேப்டன்)
கே.எல். ராகுல் (துணை கேப்டன்)
விக்கெட் கீப்பர்கள்:
ரிஷப் பந்த்
தினேஷ் கார்த்திக்
வீரர்கள்:
விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ஹர்திக் பாண்டியா, ஆர். அஸ்வின், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங்.
காத்திருப்பு வீரர்கள்:
முகமது. ஷமி, ஷ்ரேயாஸ் ஐயர், ரவி பிஷ்னோய், தீபக் சாஹர்.
ஆஸ்திரேலியா டி20 போட்டிகளுக்கான இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ஆர். அஸ்வின், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், புவனேஷ்வர் குமார், முகமது. ஷமி, ஹர்ஷல் படேல், தீபக் சாஹர், ஜஸ்பிரித் பும்ரா.
தென்னாப்பிரிக்கா டி20 போட்டிகளுக்கான இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஆர். அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், முகமது. ஷமி, ஹர்ஷல் படேல், தீபக் சாஹர், ஜஸ்பிரித் பும்ரா.
பின்குறிப்பு:
ஹர்திக் பாண்டியா, அர்ஷ்தீப் சிங் மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகியோர் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான சொந்தத் தொடரின் போது கண்டிஷனிங் தொடர்பான வேலைகளுக்காக NCA க்கு அறிக்கை செய்வார்கள் எனவும் பிசிசிஐ தெரிவித்திருந்தது.
இதனைத் தொடர்ந்து, பலரும் இந்த அணி வகுப்பு குறித்து தங்களது கருத்துகளை வெளிப்படுத்தி வருகின்றனர். ஏன் இந்த முறையும் ரோஹித் சர்மா தலைமை என்றும், ஏன் ஜடேஜா தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றும், கோபமாக பதிவிட்டு வருகின்றனர்.
ஏற்கனவே, சமீபத்தில் நடந்த ஆசிய கோப்பைகளில், இந்திய அணி பல முறை எதிர்பாராத விதமாக தோல்விகளை சந்தித்த போது, அணியை ஊக்குவிக்க ரோகித் எதுவும் செய்யவில்லை என்ற கருத்தும், அர்ஷ்தீப் சிங்- சர்ச்சையின் போது, அவரை நிராகரித்த முதல் சக வீரராக ரோஹித் இருந்ததும், பல விமர்சனங்களை சந்தித்த நிலையில், மீண்டும் ரோஹித்தின் தலைமை நல்ல படியாக இந்திய அணிக்கு சாதகமாக அமையுமா? என்ற கேள்விகள் கிரிக்கெட் ரசிகர்கள் இடையில் கிளம்பியுள்ளது.