குழாய் போட்டும் ஒரு மாதமாகியும், குடிநீர் வராததால் ஆத்திரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்..!

குழாய் போட்டும் ஒரு மாதமாகியும்,  குடிநீர் வராததால் ஆத்திரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட  மக்கள்..!

ராசிபுரத்தில் முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தகவல் அறிந்து வந்த அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி பின்னர் போராட்டம் கைவிடப்பட்டது. 

நாமக்கல் மாவட்டம் சந்திரசேகரபுரம் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். 
அவர்களிடம்,  அப்பகுதியைச் சேர்ந்த வார்டு உறுப்பினர்கள் குடிநீர் வழங்குவதற்காக 'ஜல் ஜீவன்' திட்டத்தின் கீழ் வீடு தோறும் குடிநீர்  குழாய் அமைக்கும்பொருட்டு, ஒவ்வொரு வீடு வாரியாக ரூ.5000 வசூல் செய்ததாக கூறப்படுகிறது. 

ஆனால் குழாய் அமைத்து ஒருமாத காலம் ஆகியும் இன்னும் குடிநீர் வராததால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள், காலிக் குடங்களுடன் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.  

இதையும்  படிக்க } எந்த ஊரு காரரா இருப்பாரு....? பிரிஞ்சு போன பொண்டாட்டிக்கு 10 ரூபா நாணயம் ஜீவனாம்சமா...?

இதனையடுத்து, தகவல் அறிந்து வந்த ராசிபுரம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதனையடுத்து, அந்த கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதையும்  படிக்க } விரைவில் தொண்டமாந்துறை கால்வாய் திட்டம் செயல்படுத்தப்படும்...அமைச்சர் துரைமுருகன் பதில்!