“கடந்த கால செயல்களுக்கு பிராயச்சித்தம் என்றால்.....” மோடி மீதான விமர்சனும் பதிலடியும்!!

“கடந்த கால செயல்களுக்கு பிராயச்சித்தம் என்றால்.....” மோடி மீதான விமர்சனும் பதிலடியும்!!

கிறிஸ்தவர்களின் பண்டிகையான ஈஸ்டர் பண்டிகையையொட்டி டெல்லியில் உள்ள பெரிய தேவாலயத்துக்கு பிரதமர் ஞாயிற்றுக்கிழமை சென்றிருந்தார்.  இதையடுத்து, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

கிறித்தவர்களின் பண்டிகையான ஈஸ்டர் அன்று டெல்லியில் உள்ள ஒரு பெரிய தேவாலயத்திற்கு பிரதமர் சென்றிருந்தார். இதனால், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், இது சங்பரிவார்களின் கடந்த கால செயல்களுக்கு பிராயச்சித்தம் என்றால் அது நல்லது என்று மோடியை கடுமையாக விமர்சித்திருந்தார்.  மேலும் மாநிலத்தில் உள்ள பிஷப்களின் இல்லங்களுக்கு பாஜக தலைவர்கள் செல்வதை நாங்கள் பார்த்தோம் எனவும் இதில் தவறேதும் இல்லை எனினும் மக்கள் தங்கள் அனுபவத்தின் அடிப்படையில் பதிலளிப்பார்கள் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் கூறியிருந்தார்.

இந்த கருத்துக்கு கேரள முதலமைச்சரை மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சரும் பாஜக தலைவருமான முரளீதரன் கடுமையாக பேசியுள்ளார்.  உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான கிறிஸ்தவர்கள் பல்வேறு கம்யூனிஸ்ட் ஆட்சிகளால் அழிக்கப்பட்டனர் என்றும் விஜயனும் அதே சித்தாந்தத்தைச் சேர்ந்தவர் தான் எனவும் கூறிய முரளிதரன் அவரே கிறிஸ்தவ ஆயர்களை துஷ்பிரயோகம் செய்துள்ளார் எனவும் கூறினார்.  

-நப்பசலையார்

இதையும் படிக்க:   “ஆளில்லா விமானங்கள் மூலம் ஆயுதங்களை....” ருசிரா கம்போஜ்!!