தக்காளி விலையைக் குறைக்க பரிசீலனை - அமைச்சர் பெரியகருப்பன்!

தக்காளி விலையைக் குறைக்க பரிசீலனை - அமைச்சர் பெரியகருப்பன்!

தக்காளி விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த நியாய விலைக் கடைகளில் தக்காளி விற்பனை செய்யும் திட்டம் படிப்படியாக விரிவுப்படுத்தப்படும் என கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். 

சென்னை  தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கோ ஆப் பசார் என்ற கூட்டுறவுச் சந்தை செயலியின் இயக்கத்தை கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், கூட்டுறவு சங்கங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் மலிவான விலையில் நுகர்வோருக்கு கிடைக்கும் வகையில்  இந்த செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

இதையும் படிக்க : ஓ.பி. ரவீந்திரநாத் குமார் வெற்றி செல்லாது...பரபரப்பு தீர்ப்பளித்து நீதிமன்றம் உத்தரவு!

முதற்கட்டமாக 8 கூட்டுறவுச் சங்கங்கள் உற்பத்தி செய்யும் 64 வகையான பொருட்கள் இந்த செயலி மூலம் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

மேலும் தாம்பரம், ஆவடி மாநகராட்சிகளில்  நியாய விலைக் கடைகளில் தக்காளி விற்பனை தொடங்கப்பட்டுள்ளதாகவும், இது படிபடிப்படியாக விரிவுபடுத்தப்படும் என்றும் அமைச்சர் பெரியகருப்பன் கூறினார்.