"இன்று என்ன நாள்?"... அமைச்சரின் கேள்விக்கு பதிலளித்த மாணவிக்கு அடித்த ஜாக்பாட்!

"இன்று என்ன நாள்?"... அமைச்சரின் கேள்விக்கு பதிலளித்த மாணவிக்கு அடித்த ஜாக்பாட்!

இன்றைக்கு என்ன நாள் ? என அமைச்சர் கேட்ட கேள்விக்கு தமிழ்நாடு நாள் என பதிலளித்த பதினோராம் வகுப்பு மாணவிக்கு அமைச்சர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மேல்நிலை கல்வி பயிலும் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டம் இன்று சைதாப்பேட்டை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் பங்கேற்றார்.

மேடையில் பேச எழுந்த போது, அமைச்சர் இன்று என்ன நாள்? என்று மாணவர்களிடத்தில் கேள்வி எழுப்பினார். அப்போது தேசிய மாணவர் படையில் உள்ள 11 ஆம் வகுப்பு பயிலும் சுஷ்மிதா என்ற மாணவி இன்று தமிழ்நாடு நாள் என்று பதில் அளித்தார்.

அமைச்சரின் கேள்விக்கு சரியான பதில் அளித்த மாணவியை ஊக்குவிக்கும் வகையில், சைதை மேற்கு பகுதி திமுக சார்பில், அந்த மாணவியின் முதலாம் ஆண்டு மேற்படிப்பு செலவினை ஏற்று
கொள்வதாக அப்பகுதி செயலாளரும், சென்னை மாநகராட்சி பத்தாவது மண்டல குழு தலைவருமான கிருஷ்ணமூர்த்தி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து மாலை முரசு தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த மாணவி, எனது தந்தையின் பொருளாதார நிலையில் திமுகவினர் உயர்கல்வி செலவை ஏற்றுக் கொண்டது என்பது மிகவும் உதவிகரமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க || இனி த்ரெட்ஸிலும் DM's பண்ணலாம்?