"கலைஞர் நினைவாக பேனா வைப்பது மனதளவில் கூட வேண்டாம்...."!

"கலைஞர் நினைவாக பேனா வைப்பது மனதளவில் கூட வேண்டாம்...."!

இராமநாதபுரத்தில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநில தலைவர் தியாகராஜன் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் வருகிற  21-ம் தேதி சென்னையில் மிக பிரம்மாண்டமான ஐம்பெரும் விழா நடைபெற உள்ளது. 

இந்நிகழ்வில் இராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து பெருந்திரளான  ஆசிரியர்கள்  கலந்து கொள்ள உள்ளனர். கடந்த அதிமுக ஆட்சியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தொகுப்பு ஊதியத்தில் நியமனம் செய்யப்பட்ட 53 ஆசிரியர்களை கால முறை ஊதியமாக நியமனம் செய்யும்படி மாற்றி மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் உத்தரவிட்டார். அதனை நினைவு கூறும் விதமாக 53 ஆயிரம் அரசு பள்ளி மாணவர்களுக்கு பேனாக்கள் வழங்க உள்ளதாகவும், மேலும், மாநில அளவில் 70 சிறந்த மாணவர்களுக்கு இளஞ்சூரியன் விருது வழங்க உள்ளதாகவும் தெரிவித்தார். 

தொடர்ந்து அவர் பேசுகையில்,   ஸ்டாலின் அரசு  ஆசிரியர்களுக்கான அரசு என்றும், இந்த அரசுக்கு ஆசிரியர் எந்த அளவுக்கு முக்கியம் என்பது தெரியும் எனவும் கூறினார். மேலும், அகவிலைப்படி உயர்வு, சரண்டர் விடுப்பு தொடர்பாக  உரிமையான போராட்டங்கள்  நடத்துவதாகவும்,  இந்த அரசிடமிருந்து பெறவில்லை என்றால் வேறு எந்த அரசியல் கட்சி ஆட்சியிலும் பெற முடியாது என்றும் கூறினார். 

தொடர்ந்து, தமிழக முதல்வர் அனைத்தும் சரி செய்து கொடுப்பார் எனவும், நீதிமன்றத்தில் வழக்குகள் உள்ளதால் காலிப் பணியிடங்களை நிரப்புவதில் சிரமங்கள் உள்ளது எனவும் குறிப்பிட்டார். அதோடு,  கலைஞர்  நினைவாக பேனா வைப்பது எந்த ஒரு ஆசிரியர் அரசு ஊழியர்களும் மனதளவில் கூட வேண்டாம் என நினைக்க மாட்டார் என்று கூறினார்.  

இதையும் படிக்க      } சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ”ரோல் மாடல்” உதயநிதி ஸ்டாலின் - அமைச்சர் சி.வி.கணேசன்!

மேலும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கலைஞரை விட அதிகமாக செய்வார் எனவும்,  பழைய ஓய்வு திட்டம் என்பது எங்களது நியாயமான கோரிக்கை அதை நிச்சயம் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையில் உள்ளது என்றும் கூறினார். 

இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் கலந்து உள்ளனர் மற்றும் தமிழ்நாடு  முழுவதும் உள்ள பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் கலந்து கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிக்க      }  விடுதலை பெற்ற முன்னாள் சிறைவாசிகளுக்கு...உதவித் தொகை வழங்கினார் முதலமைச்சர்...!