ஆடு, மாடுகள் கூட இந்த அரிசியை சாப்பிடாது.... வீடியோ வைரல்!!!

ஆடு, மாடுகள் கூட இந்த அரிசியை சாப்பிடாது.... வீடியோ வைரல்!!!

ரேஷன் கடையில் வழங்கப்பட்டு வரும் அரிசிகள் தரம் குறைந்து காணப்படுவதாகவும், ஆடு, மாடுகள் கூட இந்த அரிசியை சாப்பிடாது என்ற சமூக வலைதளங்களின் வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் துறையின் மூலம் தென்காசி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.  அப்படி, வழங்கப்பட்டு வரும் ரேஷன் பொருட்கள் தரம் குறைந்து காணப்படுவதாக பொதுமக்கள் தொடர் குற்றம் சாட்டிய நிலையில், இது தொடர்பாக எந்த விதமான நடவடிக்கைகளும் எடுக்காமல் அதிகாரிகள் இருந்தனர்.

இந்த நிலையில், தென்காசி மாவட்டம் செங்கோட்டை பகுதியில் செயல்பட்டு வரும் ரேஷன் கடை ஒன்றில் தரமற்ற ரேஷன் அரிசி விநியோகம் செய்ததாகவும், அந்த அரிசியை ஆடு மாடுகள் கூட சாப்பிடாது எனவும் கூறி சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரல் ஆகி வருகிறது.  மேலும், தரமற்ற முறையில் வழங்கப்படும் அரிசி குறித்து புகார் கொடுத்தால் எந்த விதமான நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்கப்படுவதில்லை எனவும், அரசால் வழங்கப்பட்டு வரும் நல்ல அரிசிகள் அனைத்தும் குடிமை பொருள் வழங்கல் உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, கடத்தப்படுவதாகவும் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும் அந்த வீடியோவில் ஒரு நபர் பேசி உள்ளார்.

இது குறித்த வீடியோ வைரல் ஆனதை தொடர்ந்து செங்கோட்டை குடிமைப் பொருள் வழங்கல் தாசில்தார் சம்பந்தப்பட்ட ரேஷன் கடைக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.  மேலும் குடிமை பொருள் வழங்கல் துறை மூலம் வழங்கப்பட்டு வரும் ரேஷன் அரிசிமூட்டைகள் கடந்த சில தினங்களாக கேரளாவிற்கு கடத்தப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வரும் சூழலில், தற்போதுரேஷன் கடையில் தரமற்ற அரிசிகளை பொதுமக்களுக்கு விநியோகம் செய்துவிட்டு நல்ல அரிசிகளை கடத்துவதாக சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:   குழந்தை போல் ஆனந்த குளியலிட்ட யானை தெய்வானை....!!