அரசு ஒதுக்கிய மயான பாதை: பயன்பாட்டிற்கு கொண்டுவரக்கோரி இருளர்கள் மனு

அரசு ஒதுக்கிய மயான பாதை: பயன்பாட்டிற்கு கொண்டுவரக்கோரி இருளர்கள் மனு


விருத்தாசலம் அருகே பரவளூர் கிராமத்தில் இருளர் காலனி மக்களுக்கு அரசு ஒதுக்கிய மயான பாதையை பயன்பாட்டிற்க்கு கொண்டுவரக் கோரி சார்ஆட்சியர் அலுவலகத்தில் இருளர் இனமக்கள்மனு அளித்தனர்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே பரவளூர் கிராமத்தில்வசித்து வரும் இருளர் இன மக்களுக்குஒதுக்கப்பட்டமயான பாதைக்காக கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக போராடியும் தற்போதுவரை பயன்பாட்டிற்க்கு வரவில்லை அதனை பயன்பாட்டிற்க்கு கொண்டுவர வேண்டி மனு அளித்தனர்.

அந்த மனுவில், இதுகுறித்து அரசு கையகபடுத்தியநிலத்தின் உரிமையாளர் ஜெயராஜ், மற்றும் இருளர் சமுதாய மக்கள், வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்து கொண்ட அமைதி பேச்சு வார்த்தையின் போது  அந்த நிலத்தின் உரிமையாளர் ஜெயராஜ் அந்த இடத்தினைதான சொட்டில்மென்டாக தருவதாக கூறியிருந்தார். அதன்படி பாதை அளவீடு செய்யப்பட்டு பாதை மடிப்பதற்கான நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | தமிழ் வருட பிறப்பு, ரம்ஜான் விடுமுறை... ஊருக்கு செல்ல 500 சிறப்பு பேருந்துகள்

தற்போது பாதை மடிக்கும் பணி துவங்கிய நிலையில் ஒரு சிலர் பணிக்கு இடையூறு செய்து பணி செய்ய விடாமல் தடுப்பதாக ஊராட்சி மன்ற நிர்வாகத்தின் மூலம் தெரிய வருகிறது எனவே நீண்ட நாள் இருளர் மக்கள் பிரச்சனையான மயான பாதையில் உடன் பாதை மடிக்கும் பணி தொடரவும் விரைந்து முடிக்கவும் வழி வகையை செய்ய வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம் என  சார் ஆட்சியர் நேர்முக உதவியாளர் செந்தில் இடம்மனு அளித்தனர்.

பகுஜன் சமாஜ் கட்சி ஒருங்கிணைந்த மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில் முருகன் தலைமையில் நடைபெற்ற இந்த மனு கொடுக்கும் நிகழ்ச்சியில் இருளர் இன மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | திருவள்ளூர் மாவட்ட அகழ்வு ஆராய்ச்சியில்,.. கண்ணாடி மணிகள் கண்டெடுப்பு