ஸ்டெர்லைட் ஆலை பற்றி உயர்ந்த ஒரு தலைவர் பேசுவது அழகல்ல....!!

ஸ்டெர்லைட் ஆலை பற்றி உயர்ந்த ஒரு தலைவர் பேசுவது அழகல்ல....!!

மக்களின் உணர்வுகளின் அடிப்படையில்  மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை பற்றி உயர்ந்த ஒரு தலைவர் பேசுவது அழகல்ல என கிருஷ்ணகிரியில் கேபி முனுசாமி கூறியுள்ளார்.

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் அதிமுகவின் புதிய உறுப்பினர் விண்ணப்ப படிவங்கள் விநியோகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.  மாவட்ட செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அதிமுக துணை பொதுச்செயலாளர் கேபி முனுசாமி கலந்துகொண்டு புதிய உறுப்பினர்கள் சேர்க்கை விண்ணப்ப படிவங்களை வழங்கினார். 

ஸ்டெர்லைட் ஆலை மூடல் மக்களின் உணர்வுகளின் அடிப்படையில் தான் கடந்த கால அரசுகள் நடவடிக்கை எடுத்திருக்கிறது எனவும் அதை உயர்ந்த பதவியில் இருக்கின்ற ஒரு தலைவர் பொதுவெளியில் இது போன்ற கருத்துக்கள் சொல்வது அவருக்கே அழகு இல்லை எனவும் காரணம் ஆட்சியாளர்கள் மக்களின் உணர்வுகள் கோரிக்கைகளை ஏற்று செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள் எனவும் அப்படி செயல்பட்டு கொண்டிருக்கக் கூடிய முடிந்த நிகழ்வை இது போன்ற கருத்துக்கள் சொல்வது வேதனை அளிக்கிறது எனவும் பேசியுள்ளார்.

மேலும் இந்திய திருநாட்டில் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கடுமையான உழைப்பால் நாட்டு மக்களை காக்க உலக தலைவராக உயர்ந்துள்ளார் எனவும் இப்படி உள்ள ஒரு காலகட்டத்தில் அந்நிய நாட்டு பணங்கள் இந்தியா வருவதற்கு அனுமதிக்க மாட்டார் எனவும் அப்படி வந்தால் உரிய நடவடிக்கை எடுத்து சிறையில் அடைப்பார் எனவும் கூறியுள்ளார்.  தொடர்ந்து பேசிய அவர் இது போல் அந்நிய சக்திகள் நாட்டிற்குள் வருவதற்கு அனுமதிக்க மாட்டார் தமிழகத்தில் உள்ள அரசு இயந்திரங்கள் அதிகாரிகள் இது போன்ற நடவடிக்கைகளுக்கு உரிய நடவடிக்கை எடுப்பார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க:  திருத்தம் கொண்டு வந்தது கண்டிக்கதக்கது.... ஓபிஎஸ்!!!