சத்துணவு ஊழியர்கள் கருப்பு உடை அணிந்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்...!!!

சத்துணவு ஊழியர்கள் கருப்பு உடை அணிந்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்...!!!

தமிழ்நாடு  சத்துணவு ஊழியர்கள்  சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ராமநாதபுரத்தில் கருப்பு உடை அணிந்து முதல்வரின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு  சங்கத்தின் தலைவி சகாய தமிழ்ச்செல்வி தலைமை தாங்கினார்.  தமிழ்நாடு அரசு தற்போது நடைமுறைப்படுத்தியுள்ள காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலம் நடைமுறைப்படுத்த வேண்டும், சத்துணவு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் ரூபாய் 6ஆயிரத்து 750 குடும்ப ஓய்வு ஊதியம் வழங்கிட வேண்டும்,  சத்துணவு அமைப்பாளர்,  சமையலர்,  சமையல் உதவியாளர்,  காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்,  ஆண் வாரிசுகளுக்கும் வேலை வழங்க வேண்டும்,  பெண் ஊழியர்களின் மகப்பேறு விடுப்பு 12 மாதங்களாக வழங்க வேண்டும்,  உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி  தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் கருப்பு உடை அணிந்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.  ஆர்ப்பாட்டத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட பெண்கள்  கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:   கனவுகளை நிறைவேற்ற மொழி ஒரு தடையில்லை..... பிரதமர் மோடி!!!