சிறுபான்மையினரின் வாக்குகளுக்காக எதிர்க்கட்சித் தலைவர்கள்.....அனுராக் தாக்கூர்!!

சிறுபான்மையினரின் வாக்குகளுக்காக எதிர்க்கட்சித் தலைவர்கள்.....அனுராக் தாக்கூர்!!

ஜெயின் தீர்த்தங்கரர் மகாவீரின் 2622வது பிறந்தநாளையொட்டி உலக அமைதி மற்றும் நல்லிணக்க தினத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு  தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பேசியுள்ளார்.

ராம நவமியில் நடந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மற்றும் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் ஆகியோரை மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் செவ்வாய்க்கிழமை மீண்டும் கடுமையாக விமர்சித்துள்ளார்.  சிறுபான்மையினரின் வாக்குகளுக்காக எதிர்க்கட்சித் தலைவர்கள் இருவரும் திருப்திப்படுத்தும் அரசியலில் ஈடுபட்டு வருவதாக அமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார்.  மேலும் இதுபோன்ற வாக்கு வங்கி அரசியல் நாட்டின் முன் பல பிரச்சனைகளை உருவாக்கி பல சவால்களை முன்வைக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க:  பட்ட பகலில் கார் கண்ணாடியை உடைத்து ரூ. 12 லட்சம் கொள்ளை..!!