அதிகாரிகளிடம் வாக்குவாதம்...11 தீட்சிதர் மீது போலீசார் வழக்குப்பதிவு...!

அதிகாரிகளிடம் வாக்குவாதம்...11 தீட்சிதர் மீது போலீசார் வழக்குப்பதிவு...!

சிதம்பரம் நடராஜர் கோயிலில் அறநிலையத்துறை அதிகாரிகளிடம் வாக்குவாத்தில் ஈடுபட்ட 11 தீட்சிதர்கள் மீது மகளிர் வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட 5 பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

கடலூர் மாவட்டத்தில் பிரசித்திபெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலின் நிகழ்வாண்டிற்கான ஆனி திருமஞ்சன திருவிழா கடந்த 17-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிலையில், கனகசபை மீது ஏறி பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி கிடையாது என தீட்சிதர்கள் பதாகை வைத்திருந்தனர். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து புகார் எழுந்த நிலையில், பதாகையை இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் போலீசார் பாதுகாப்புடன் வந்து அகற்றினர். 

இதையும் படிக்க : பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...!

இந்த விவகாரம் தொடர்பாக  தீட்சிதர்களுடன் கடலூர் மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்தை நடத்தினார். எனினும் அவர்கள் விடாப்பிடியாக இருந்ததால் அதிகாரிகள் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்தனர்.

இந்நிலையில் திருமஞ்சனம் தரிசனம் உற்சவம் முடிவுற்றதையடுத்து,  இன்று  காலை நடை திறக்கப்பட்டு பால் நெய்வேத்திய பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் கனகசபை மீது ஏறி சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். 

முன்னதாக அறநிலையத்துறை அதிகாரிகளிடம் வாக்குவாத்தில் ஈடுபட்ட 11 தீட்சிதர்கள் மீது மகளிர் வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட 5 பிரிவுகளின்  கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.