ஆயிரக்கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..... அச்சத்தில் பொதுமக்கள்...!

ஆயிரக்கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..... அச்சத்தில் பொதுமக்கள்...!

திண்டுக்கல் - நத்தம் சாலையில் பர்மா காலனி அருகே மாநகராட்சி 34 வது வார்டுக்கு உட்பட்ட மழை நீர் சேமிப்பு மையம் உள்ளது. கடந்த 2015ல் அதிமுக ஆட்சியில் ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் பேவர் கற்கள் பதிக்கப்பட்டு நடைபயிற்சியுடன் கூடிய மழை நீர் சேமிப்பு மையம் அமைக்கப்பட்டது.  இதில் குத்தகைகாரர்கள் மூலம் மீன்கள் வளர்க்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் கடந்த 3 நாட்களாக மழைநீர் சேமிப்பு குளத்தில் மீன் செத்து கரையோரம் ஒதுங்கி கிடக்கிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீன்கள் செத்து மிதந்து வருவது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மழைநீர் சேமிப்பு மையத்தை சுற்றி பர்மா நகர், ரத்தினம் நகர் மற்றும் பள்ளிவாசல்  உள்ளிட்ட குடியிருப்புகள் உள்ளது. இந்த குளத்தில் இருந்து வரும் துர்நாற்றத்தால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது..

இதையும் படிக்க    }  சிதம்பரம் தீக்ஷீதர்களுக்கென எனத் தனி சட்டம் வகுத்து தந்துளாரா?.... - ஆளுநரிடம் அமைச்சர் சேகர் பாபு கேள்வி.

இந்த குளத்தில் மர்மமான முறையில் மீன்கள் செத்து மிதப்பது பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.  குளத்தின் நீர் நச்சுத்தன்மை அடைந்து விட்டதா...? அல்லது குளத்தில் ஏதேனும் விஷம் கலந்துள்ளதா..? என்று பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். 

இந்த மழைநீர் சேமிப்பு குளத்தின் மூலம் சுமார் 5 கிலோ மீட்டர் சுற்று வட்டார பகுதிகளுக்கு நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்குகிறது. தண்ணீர் விஷத்தன்மை அடைந்ததா அல்லது நச்சு பொருட்கள் ஏதும் கலந்து உள்ளதா? என்ற குழப்பத்தில் அப்பகுதி மக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர்.

இதையும் படிக்க    }  ரேஷன் கடைகளில் இனி ”QR Code”தான்...அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பு!