ஒரே வீட்டில் இரண்டு கலெக்டரா..? ஐ.ஏ.எஸ் அதிகாரிகளான அக்கா,தங்கை ...!

ஒரே வீட்டில் இரண்டு கலெக்டரா..?   ஐ.ஏ.எஸ் அதிகாரிகளான அக்கா,தங்கை ...!

கடலூர் மாவட்டம் பன்ருட்டி அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அக்கா தங்கை இருவரும் ஐ ஏ எஸ் பணியில் சேர்ந்து பெருமை சேர்த்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த மருங்கூர் கிராமத்தை சேர்ந்த முந்திரி விவசாயி ராமநாதன், மகள் சுஷ்மிதா ராமநாதன் UPSC தேர்வில் அகில இந்திய தரவரிசையில்  528 - இடத்தில் வெற்றி பெற்று கடலூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.

 இவரது தங்கை ஐஸ்வர்யா ராமநாதன் கடந்த 2019  ம் ஆண்டு நடைபெற்ற UPSC தேர்வில் தமிழக அளவில் இரண்டாவது இடத்தையும், அகில இந்திய அளவில் 47வது இடத்தையும் பெற்று தற்போது சென்னை பொன்னேரி சார் ஆட்சியராக உள்ளார்.

மேலும், இந்த  வெற்றி குறித்து சுஷ்மிதா ராமநாதன் கூறியதாவது....

" பெண்களுக்கு கல்வி தான்  முக்கியம்; கல்வி மூலமாகதான் முன்னேற்றம் அடையமுடியும் என எனது அம்மா கூறி வந்தார்கள். பெற்றோர்களின் ஒத்துழைப்பின் காரணமாகவே இந்த தேர்ச்சி கிடைத்தது. பெண்கள் அனைவரும் கல்வி பயில வேண்டும் அதன் வழியாகவே முன்னேற்றத்தை அடைய வேண்டும்; அதற்காகவே பாடுபட எனது முயற்சியை தொடங்கியுள்ளேன்." என்று கூறினார். 

ஒரே குடும்பத்தைச்  சேர்ந்த இரண்டு  மகள்கள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாகி தங்களது பெற்றோருக்கு பெருமை சேர்த்த இந்த நெகிழ்ச்சியான சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெருமையையும் மகிழ்ச்சியையும்  அளித்துள்ளது. 

இதையும் படிக்க    | கள்ளச்சாராயம்: 5 போலீசார் சஸ்பெண்ட்!