கொழுத்தும் வெயிலுக்கு என்ன பண்ணலாம் ? பண்ணக்கூடாது!!!!

கொழுத்தும் வெயிலுக்கு என்ன பண்ணலாம் ? பண்ணக்கூடாது!!!!

அடிக்குற வெயிலுக்கு இன்னும் கொஞ்சம் அதிகமா வெயில் அடிச்சா தலையில இருக்குற  மூளை உருகி ஊத்துக்கின்ற அளவுக்கு வெயில் கடந்த சில நாட்களாகவே 100  டிகிரி செல்சியஸ் கடந்து செல்லும் நிலையில் இந்த கோடை வெயிலை சமாளிக்க பல முறைகளை கையாண்டாலும் கூட அரசு சில வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. அவை பின்வருமாறு.....

இந்த 5 டிப்ஸ் போதும்.. அடிக்கிற வெயில்லையும் ஜில்லுனு இருக்கலாம்

செய்ய வேண்டியவை :

1. உடலின் நீர்ச்சத்து குறையாமல் பராமரிக்க, தேவையான அளவு தண்ணீர் குடிக்கவும்.

2. அவசியமான பணிகளுக்கு வீட்டை விட்டு வெளியே செல்லும்போது குடிநீரை கையுடன் எடுத்துச் செல்லுங்கள்.

NATIONAL HYDRATION DAY - June 23, 2023 - National Today

3. ஓ.ஆர்.எஸ் (ORS), எலுமிச்சை ஜூஸ், இளநீர், மோர் மற்றும் பழச்சாறுகள் குடிக்கவும்.

4. இந்த பருவகாலத்தில் கிடைக்கும் பழங்கள், காய்கறிகள் மற்றும் வீட்டில் சமைத்த உணவை உண்ணுங்கள்.

5. நல்ல காற்றோட்டம் உள்ள மற்றும் வெப்பம் தணிந்த இடங்களில் இருக்கவும்.

6. மெல்லிய, தளர்வான பருத்தி ஆடைகளை அணியவும்.

7. வெளியில் செல்லும் போது காலணிகளை அணியவும்.

8. மதிய நேரத்தில் வெளியே செல்லும் போது குடை கொண்டு செல்லவும்.

9. உடல் சோர்வாகவோ, மயக்கமாகவோ உணரும் பொழுது உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறவும்.

மேலும் படிக்க | ஜல்லிக்கட்டு தீர்ப்பு "தமிழ்நாட்டின் பண்பாட்டு மரபுக்கு கிடைத்த வெற்றி" வைகோ!

செய்யக் கூடாதவை :

1. வெயில் காலங்களில் வெறுங்காலுடன் வெளியே செல்லாதீர்கள்.

2. சிறிய குழந்தைகள், கர்பிணிகள், முதியோர்கள் அதிக வெப்பத்தில், மதிய வேளையில் (12 மணி முதல் 3 மணி வரை) வெளியே செல்வதை தவிர்க்கவும்.

​துறை வாரியாக மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் பொதுமக்களுக்கான விழிப்புணர்வு குறித்து தலைமைச் செயலாளர் அவர்கள் விரிவான அறிவுரைகளை வழங்கினார்.

மேலும் படிக்க | "தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு வாடகையில்லா குடியிருப்புகள்" மத்திய -மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு!

இந்த அறிவுரைகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை தொகுத்து அனைத்து துறைகளுக்கும் வழங்க வேண்டும் என்றும், தொடர்ச்சியான ஆய்வுக் கூட்டங்கள் மூலம் இவை பின்பற்றப்படுகின்றனவா என்பதை கண்காணித்திட வேண்டியதன் அவசியத்தையும் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு எடுத்துரைத்தார்.