500 சில்லரை மதுபானக் கடைகளை கண்டறியும் பணிகள் தொடக்கம்...எதற்காக?!

500 சில்லரை மதுபானக் கடைகளை கண்டறியும் பணிகள் தொடக்கம்...எதற்காக?!

தமிழ்நாட்டில் 500 சில்லறை மதுபான விற்பனை கடைகள் கண்டறியும் பணிகள் துவங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சட்டப்பேரவையில் நடைபெற்ற மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தின் மீது உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் 5,329 மதுபான சில்லரை விற்பனை கடைகள் செயல்பட்டு வரும் நிலையில், அதில் தகுதியான 500 மதுபான சில்லரை விற்பனை கடைகள் கண்டறியப்பட்டு மூடப்படும் என்பது உட்பட 9 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

இந்த நிலையில் 500 கடைகளை குறைப்பற்கான அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக எந்தெந்த கடைகளை குறைப்பது என்பது குறித்த நடவடிக்கைகள் துவங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொழில்முறை, 50 மீட்டர்களுக்கு இடையே இருக்கக்கூடிய கடைகள், வருவாய் குறைவாக உள்ள கடைகள், பள்ளி, கோவில்கள் அருகில் உள்ள கடைகள் உள்ளிட்ட காரணிகள் அடிப்படையில் 500 கடைகள் தேர்வு செய்யப்பட உள்ளன.  ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் 500 கடைகளை மூடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளது.

இதையும் படிக்க:  தூய்மைப் பணியாளர் பணி... தமிழ் தெரிந்தால் மட்டுமே வேலை?!!