தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாம் அலை பரவ காரணமே அதிமுக தான்.! காங்கிரஸ் எம்.பி குற்றச்சாட்டு.!  

தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாம் அலை பரவ காரணமே அதிமுக தான்.! காங்கிரஸ் எம்.பி குற்றச்சாட்டு.!  

தமிழகத்தில் இரண்டாவது கொரானா தொற்று நோய் அலை பரவக் காரணம் மத்திய அரசும் முந்தைய அதிமுக அரசுதான் என காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் குற்றச்சாட்டியுள்ளார். 

சிவகாசி அருகே உள்ள திருத்தங்கலில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் சார்பாக கொரானா காலகட்டத்தில் வேலையின்றி தவித்து வரும் ஏழை எளிய மக்களுக்கு அரிசி பை மற்றும் காய்கறி வகைகள் இலவசமாக வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் மற்றும் சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் அசோகன் ஆகியோர் அரிசிப் பை மற்றும் காய்கறி வகைகளை ஏழை எளியோருக்கு வழங்கினர்

அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த மாணிக்கம் தாகூர் எம்.பி கூறுகையில்,  தற்போது ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மக்களுக்கு அத்தியாவசியத் தேவையான தீப்பெட்டி தயாரிக்கும் பணிக்கு தீப்பெட்டி தொழிற்சாலைகள் இயங்க அனுமதி அளித்தது போல, பட்டாசு தொழிற் தொழிற்சாலைகளையும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம் என்றார்.

மேலும், தமிழகத்தில் தடுப்பூசி கிடைக்காததற்கும் தொழிலாள வர்க்கத்திற்கு தடுப்பூசி போட  முடியாத தற்கும் காரணம் மத்திய அரசுதான் இப்பிரச்சனையில் ஒன்றிய அரசு பாரபட்சம் பார்க்காமல் பின்தங்கிய மாவட்டமான விருதுநகர் மாவட்ட மக்களைப் பாதுகாக்கும் வகையில் கொரானா தடுப்பூசி வழங்க வேண்டும். மத்திய அரசு தடுப்பூசி மருந்து வழங்குவதில் காட்டிய மெத்தனப் போக்கில் விளைவாகவே கொ ரானா நோய்த்தொற்றின் இரண்டாவது பரவல் காரணமாக அமைந்துள்ளது என்றார்.  

தொடர்ந்து பேசிய அவர், நாட்டில் கொரானாவை ஒழித்து விட்டோம் என்று மத்திய அரசு அறிவித்து ஆறரை கோடி தடுப்பூசி மருந்துகளை வெளிநாட்டிற்கு அனுப்பியது துரதிஷ்டவசமானது. அன்றைய காலகட்டத்தில் தமிழகத்தில் ஆட்சியில் இருந்த அதிமுக அரசு ஒன்றிய அரசிடமிருந்து தடுப்பூசியை வாங்க நடவடிக்கை எடுக்காமல் சட்டமன்ற தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டதால் தான் தமிழகத்தில் நோய்தொற்று பரவுவதற்கு காரணமாக அமைந்துவிட்டது. இதற்கு மத்திய மோடி தலைமையிலான பாஜக அரசும் அப்போதைய எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான  அதிமுக அரசும் தான் காரணம் எனக் குற்றம் சாட்டினார். 


அதோடு, கடந்த கால அதிமுக அரசின் கொரானா காலகட்ட நடவடிக்கையையும் தற்போதைய திமுக அரசின் கொரானா கால கட்ட நடவடிக்கையும் ஒப்பிட்டு பார்க்கும்போது தமிழக முதல்வர் சுகாதாரத்துறை அமைச்சர் தொழில்துறை அமைச்சர் ஆகியோரின் நடவடிக்கையால் நோய்தொற்று மென் மேலும் பரவாமல் கட்டுக்குள் வந்துள்ளது. கொரானா நோய் மேலும் பரவாமல் தடுக்கும் பொருட்டு சமூக இடைவெளி விட்டு அரசின் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி ஆக்சிசன் தட்டுப்பாடின்றி கிடைக்க வழிவகை செய்து அரசியல் செய்யாமல் தமிழக மக்களைப் பாதுகாக்கின்ற பொறுப்பு அனைவருக்கும் உண்டு எனக் கூறினார்.