50 நாட்களில்.. 25,000 குடும்பங்கள்... கெத்து காட்டும் உதயநிதி!! மிரண்டு பார்க்கும் எம்.எல்.ஏக்கள்

50 நாட்களில்.. 25,000 குடும்பங்கள்... கெத்து காட்டும் உதயநிதி!! மிரண்டு பார்க்கும் எம்.எல்.ஏக்கள்

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின் வெற்றிபெற்றார். இவருக்கு தேர்தலில் சீட் கொடுத்தபோதே ஸ்டாலினின் மகன்  என்பதால் சீட் கொடுக்கிறார்கள் என்றும், வாரிசு அரசியல் செய்கிறது திமுக என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்படும் என்றும் கூறப்பட்டது.

ஆனால் திமுக வெளியிட்ட அமைச்சரவைப் பட்டியலில் உதயநிதி ஸ்டாலினின் பெயர் இடம்பெறவில்லை. ஆனாலும் தன் மீதான விமர்சனங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் உதயநிதிக்கு ஏற்பட்டது. மேலும் முதல்வரின் மகன் என்பதாலும், திரை நட்சத்திரம் என்பதாலும் இயல்பாகவே ஊடக கவனம் அவர் மீது திரும்பியது. 

ஆகவே பிற எம். எல்.ஏக்களை விட அதிகம் உழைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதன் காரணமாக தொகுதியின் மூலை முடுக்கெல்லாம் சென்று ஆய்வு பணிகளில் ஈடுபட்டு வருகிறார் உதயநிதி. அதிலும் தொகுதி மக்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள இவர் எடுத்த முயற்சியால்  இப்போது தமிழகத்திலேயே அதிக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட மக்கள் இருக்கும் தொகுதியாக சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி மாறியுள்ளது. 

கொரோனாவை தடுக்க தடுப்பூசி மட்டுமே ஒரே வழி என்று நிபுணர்கள் கூற எம். எல்.ஏ பதவியை ஏற்றதும் தடுப்பூசி விழிப்புணர்வை ஏற்படுத்த உதயநிதி செல்லாத வீடே இல்லை என்ற அளவிற்கு அவர் பலமுறை தொகுதியில் ரவுண்ட் அடித்துவிட்டார். மேலும் தானே முன்னுதாரணமாக தடுப்பூசி போட்டுக்கொண்டார். அதோடு தொகுதி முழுக்க தடுப்பூசி முகாம்களை ஏற்படுத்தி நானே தடுப்பூசி போட்டுக்கொண்டேன், நீங்களும் போட்டுக்கொள்ளுங்கள் என்று மக்களை உற்சாகப்படுத்தினார். 

குறிப்பாக தொகுதியின் இளைஞர்களை சந்தித்து தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டிய அவசியத்தை கூறி அவர்களை மட்டுமல்லாது அவர்கள் குடும்பத்தினரையும் தடுப்பூசி போட அறிவுறுத்தினார். ஒன்றிய அரசு போதிய தடுப்பூசி கொடுக்காத நிலையிலும் கொடுக்கப்பட்ட தடுப்பூசிகளை வைத்து அவர் இந்த சாதனையைப் படைத்துள்ளார். 

தற்போது சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 90 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டுள்ளார்கள். அதாவது கிட்டத்தட்ட 25 ஆயிரம் குடும்பங்கள் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளார்கள். தமிழ்நாட்டிலேயே இங்குதான் அதிக கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் உதயநிதி ஸ்டாலின் தான் என்கிறார்கள் பொதுமக்கள். ஒன்றிய அரசு தமிழகத்துக்கு போதிய அளவு கொரோனா தடுப்பூசிகளை கொடுத்தால் இன்னும் அதிகம் பேருக்கு தடுப்பூசி போடப்படும் என்பது இதிலிருந்து உறுதியாகத் தெரிகிறது.