ஒரு நாள் ஏடிஜிபி ஆன சிறுவன்.. கேன்சரால் போராடும் சிறுவனுக்கு பிரயக்ராஜ் ஏடிஜிபி பிரேம் பிரகாஷ் அளித்த பரிசு!!

ஒரு நாள் ஏடிஜிபி ஆன சிறுவன்.. கேன்சரால் போராடும் சிறுவனுக்கு பிரயக்ராஜ் ஏடிஜிபி பிரேம் பிரகாஷ் அளித்த பரிசு!!

உத்திரப்பிரதேசத்தில் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் 12 வயதுடைய  சிறுவனின் மன உறுதியை கூட்டும் வகையில் பிரயக்ராஜ் மண்டலத்தின் ஏடிஜிபியான பிரேம் பிரகாஷ், அந்த சிறுவனை ஒருநாள் ஏடிஜிபியாக நியமித்தார்.

பிரயக்ராஜ் மண்டலத்தின் ஏடிஜி, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 12 வயது சிறுவன் ஹர்ஷ் துபேயை  பிரயாக்ராஜ் காவல்துறையின் கூடுதல் தலைமை இயக்குநராக (ஒருநாள் ஏடிஜிபியாக) நியமித்துள்ளார். அதன்படி ஏடிஜியாக நாற்காலியில் அமர்ந்த 12 வயது சிறுவன், காவல் துறையின் செயல்பாடுகள் குறித்து கேள்விகள் கேட்டதோடு, ஆவணங்களையும் பார்வையிட்டான்.

அதுமட்டுமில்லாமல் சிறுவன் ஹர்ஷ் தனது ஒரு ஏடிஜி செய்யக்கூடிய அனைத்து வேலைகளையும் செய்தார். பின் உயர் போலீஸ் அதிகாரிகள் “சிறிய ஏடிஜி” உடன் புகைப்படங்கள் எடுத்து கொண்டனர். மேலும் அங்கு பணியில் இருந்த காவல்துறை அதிகாரிகளும் ஒருநாள் ஏடிஜிக்கு சல்யூட் அடித்து மரியாதை செய்துள்ளனர்.

இது குறித்து ஏடிஜி பிரேம் பிரகாஷ் கூறும்போது,   இ-ரிக்‌ஷா ஓட்டுனர் சஞ்சய் துபேவின் மகன் தான் ஹர்ஷ்.  இந்த ஒருநாள் ஏடிஜி என்பது புற்று நோயால் பாதிக்கப்பட்ட சிறுவன் ஹர்ஷ் துபேயின் மன உறுதியை அதிகரிக்க செய்வதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை தான். அதன்படி ஏடிஜி யாக நியமிக்கப்பட்டார்.

இந்நிகழ்ச்சியில் கமலா நேரு மருத்துவமனையின் மருத்துவர்கள் டாக்டர் பி பால் மற்றும் டாக்டர் ராதாராணி கோஷ் மற்றும் சமூக ஆர்வலர் பங்கஜ் ரிஸ்வானி ஆகியோர் கலந்து கொண்டனர்.

தனது மகனின் சிகிச்சை நடந்து வரும் நிலையில், விரைவாக குணமடையும் நோக்கத்தில், அவரை ஊக்கப்படுத்தவும், உற்சாகப்படுத்தவும், மூத்த போலீஸ் அதிகாரிகள்,சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் குழு மற்றும் சமூக ஆர்வலர் பங்கஜ் ரிஸ்வானி ஆகியோர் செய்த இந்த விஷயத்திற்கு நன்றி தெரிவித்தார் ஹர்ஷாவின் தந்தை சஞ்சய் துபே. மேலும், சிகிச்சை அளித்து வரும் டாக்டர்கள் குழுவும் சிறுவனுக்கு முழு மருத்துவ உதவியை உறுதியளித்ததாக ஐ.ஏ.என்.எஸ் தெரிவித்துள்ளது.

கம்லா நேரு மருத்துவமனையின் மூத்த புற்றுநோயியல் நிபுணரும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான பி. பால், ஹர்ஷுக்கு சிகிச்சை அளித்து வருகிறார். அது குறித்து ஐ.ஏ.என்.எஸ், "புற்றுநோயை குணப்படுத்த முடியாத நோய் என்று அழைக்கப்படுகிறது. ஆனால் சரியான நேரத்தில் சரியான சிகிச்சை நோயாளிக்கு வழங்கப்பட்டால், அது குணமாக்கக் கூடிய ஒரு சாதாரண நோய் ஆகி விடும். புற்று நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பொறுமையும் தைரியமும் வேண்டும்." என மேற்கோள் காட்டியது.