கர்நாடகா தேர்தலில் அதிமுக போட்டி...வேட்பாளரை அறிவித்த எடப்பாடி...தொகுதி இதுதான்!

கர்நாடகா தேர்தலில் அதிமுக போட்டி...வேட்பாளரை அறிவித்த எடப்பாடி...தொகுதி இதுதான்!

கர்நாடக மாநில சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் அதிமுக சார்பில் ஒரு தொகுதியில் போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல் வருகின்ற மே 10 ஆம் தேதி நடைபெறவுள்ள உள்ளது. இதனால் கர்நாடக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இத்தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று பாஜகவும், காங்கிரஸ்சும் ஒருபுறம் போட்டியிட்டு கொண்டு அதிக மும்மரம் காட்டி வருகின்றனர். 

இதையும் படிக்க : கோலாகலமாக தொடங்கியது ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில் சித்திரை தேரோட்டம்!

மறுபுறம் கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் வேட்பாளர்களை நிறுத்த வேண்டும் என்று ஈபிஎஸ்சும், ஓபிஎஸ்சும் தனித்தனியே அறிவித்து வந்தனர். இந்நிலையில் கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் நிற்கவிருக்கும் வேட்பாளர்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்து கழக பொதுச்செயலாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், ”அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி மன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, வரும் 10 ஆம் தேதி நடைபெறவுள்ள கர்நாடக மாநில சட்டமன்ற பொதுச்தேர்தலில், அதிகம் தமிழர்கள் இருக்கக்கூடிய புலிகேசி நகர் (159) சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் டி. அன்பரசன் அதிகாரப்பூர்வ வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது”. இதன்மூலம், கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக தன்னிச்சையாக போட்டியிடுவது அதிகாரப்பூர்வமாக உறுதியாகியுள்ளது.